தற்காலிக டிரைவர்கள் புண்ணியத்தில் 4வது விபத்து: 3 பேர் பலி
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே பஸ்ஸூக்காகக் காத்திருந்தவர்கள் மீது அரசு பஸ் மோதியதில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.அரசு நியமித்த தற்காலிக டிரைவர் தான் இந்த பஸ்ஸை ஓட்டி வந்தார்.
அனுபவமில்லாத டிரைவர்களை வைத்து பஸ்களை ஓட்டுவதால் இதுபோன்று தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டுவருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பட்டாளம் கூட் ரோடு அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நேற்றுகாலை பயணிகள் பஸ்ஸூக்காக காத்திருந்தனர்.
அப்போது திருச்சியிலிருந்து சென்னைக்கு அரசு பஸ் ஒன்று வந்துகொண்டிருந்தது. திடீரென்று அந்த பஸ் தனதுகட்டுப்பாட்டை இழந்து பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் கன்னியம்மாள்,நித்தியா ஆகிய 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பிணமானார்கள்.
மேலும் சத்யா என்ற 2 வயதுக் குழந்தை, ஜீவா, சரண்யா, கிருஷ்ணாராம் ஆகியோர் காயமடைந்த ஆபத்தானநிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அப்போது சத்யா என்ற குழந்தை வழியிலேயேமரணமடைந்து விட்டது.
விபத்துக்குக் காரணமான டிரைவர் உடனே தலைமறைவாகி விட்டான்.
கடந்த 2 நாட்களில் கோவில்பட்டி, ராமநாதபுரம், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் தாற்காலிக டிரைவர்களால்இயக்கப்பட்ட பஸ்கள் விபத்துக்குள்ளாயின.
கடந்த 2 நாட்களில் மொத்தம் 33 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.
தமிழக சாலைகளில் வாகனம் ஓட்டுவதே ஆபத்து என்ற நிலை உருவாகி வருகிறது.
இந்நிலையில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications