ஆப்கான் விவகாரத்தில் இந்தியா தலையிடுவது ஏன்?
தொடர்ச்சி...
இந்தியாவின் கருத்துக்கு மரியாதை:
ஆப்கான் விவகாரத்தைக் கவனிப்பதற்காகவே எஸ்.கே. லம்பா என்ற அதிகாரியை ஐ.நாவில் நியமித்துள்ளது.நேற்று நடந்த ஜி-21 கூட்டத்தில் இந்தியாவின் கருத்தை லம்பா விளக்க அனைத்து நாடுகளும் மிகக் கவனமாகக்கேட்டன.
இந்தியா சொன்னால், நார்த்தர்ன் அலையன் படை கேட்கும் என்பதால் இந்தியாவின் கருத்துக்கு மிகுந்தமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இதற்கிடையே ரோம் நகரில் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வரும் 80 வயதான ஆப்கன் மன்னர் ஷகீர் ஷாவைமீண்டும் ஆப்கானிஸ்தானுக்குக் கொண்டு வந்தால் புதிய ஆட்சி அமைப்பதற்கான பணிகள் சூடுபிடிக்கும்.
இவர் புஷ்தூன் இனத்தைச் சேர்ந்தவர். தலிபான்களும் புஷ்தூன் இனத்தினர் தான். இந்த இனத்தினர் தான்ஆப்ானிஸ்தானில் பெரும்பான்மையாக உள்ளனர்.
அடுத்தபடியாக தஜிக்குகளும், உஸ்பெக்குகளும், ஹஸாராக்களும், ஷியாக்களும் உள்ளனர்.
நார்த்தர்ன் அலையன்ஸ் படையில் புஷ்தூன்கள் இல்லை. இதனால் இவர்களிடம் ஆட்சியை ஒப்படைக்க முடியாது.அப்படி ஒப்படைத்தால் நாட்டில் பெரும்பான்மையாக உள்ள மக்கள் இந்தப் படையினரின் ஆட்சியை ஏற்கமாட்டார்கள். மீண்டும் கலவரம் வெடிக்கும்.
அதே நேரத்தில் இவர்களை ஒதுக்கவும் முடியாது.
எனவே, ஷகீர் ஷா தலைமையில் ஆட்சியை அமைத்து அதில் நார்த்தர்ன் அலையன்ஸ் பிரதிநிதிகளையும் சேர்க்கஅமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இந்திய ஆதரவு ஜனாதிபதி:
ஆனால், நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரின் ஆதரவு பெற்ற புர்ஹானுதீன் ரப்பானி தான் இப்போதும் கூடஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதியாக இருந்து வருகிறார்.
ஷகீர் ஷாவை அதிபராக்கினால் ரப்பானியின் நிலைமை என்ன என்பது குறித்து நார்த்தர்ன் அலையன்ஸ்கவலையடைந்துள்ளது. ரப்பானி தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என அவர்கள் கோருகின்றனர்.
ஆனால், ரப்பானி ரஷ்ய, இந்திய ஆதரவாளர். பாகிஸ்தானை (அமெரிக்காவையும் தான்) வெறுப்பவர். எனவே,அவரை அடக்கி வைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ரப்பானியை ஆதரிக்கும் நார்த்தர்ன் அலையன்சுக்குஉஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் நிதியுதவியும் ஆயுத உதவியும் தந்து வருகின்றன.
எனவே, ரப்பானியையும் நார்த்தர்ன் அலையன்ஸையும் முழுமையாக ஏற்க அமெரிக்கா தயாராக இல்லை. அதேநேரத்தில் தலிபான்களை விரட்டியடித்து ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதிகளை பிடித்து வைத்துள்ள நார்த்தர்ன்அலையன்ஸை ஒதுக்க முடியாது.
ஆகவே, ஷகீர் ஷா-நார்த்தர்ன் அலையன்ஸ் தலைமையில் சுப்ரீம் கவுன்சில் ஒன்றை உருவாக்க ஐக்கிய நாடுகள்சபை முயன்று வருகிறது.
இந்தக் கவுன்சில் உடனடியாக ஆப்கானிஸ்தானின் கிராம மதத் தலைவர்களின் கிராண்ட் கவுன்சில் கூட்டத்தைக்கூட்டம்.
இந்த கிராமத் தலைவர்கள் அடுத்த ஆட்சியைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்த ஆட்சியின கீழ் ஆப்கானிஸ்தானுக்குபுதிய அரசியல் சட்டம் உருவாக்கப்படும். தேர்தல் முறைகளும் உருவாக்கப்படும்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications