நக்கீரன் நிருபரை விடுவிக்க கோரிக்கை
சென்னை:
கர்நாடக அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியத்தை உடனடியாகவிடுவிக்க வேண்டும் என கர்நாடக பத்திரிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சந்தன வீரப்பனை முதன்முதலில் காட்டுக்குள் போய் சந்தித்தவர் சிவசுப்பிரமணியம் தான். இவர் கடந்த இருதினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.
அவரை உடனே விடுவிக்க வேண்டும் என பத்திரிக்கையாளர்கள் கோரி வருகின்றனர். பத்திரிக்கைசுதந்திரத்துக்காக போராடி வரும் பத்திரிக்கையாளர் செயல் கமிட்டி என்ற அமைப்பின் சார்பில் கர்நாடக உள்துறைஅமைச்சர் மல்லிகார்ஜூன கார்கேயிடம் இது தொடர்பாக மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு தமிழகஅரசுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த மனுவில்,
நிருபர் சிவசுப்பிரமணியத்தை கர்நாடக போலீசார் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் நகரில் அவரது வீட்டில்வைத்து கைது செய்துள்ளனர்.
சிவசுப்பிரமணியத்தை போலீசார் போல இருந்த சிலர் அவரது வீட்டுக்கு அருகே வைத்து இழுத்துச் சென்றதாகநக்கீரன் பத்திரிக்யிைன் ஆசிரியர் ஆர்.கோபால் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல்செய்துள்ளார்.
பத்திரிக்கைகளின் சுதந்திரத்தைக் காக்கும் வகையில் இவ் விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டுசிவசுப்பிரமணியத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை இருந்த அனைத்து கர்நாடக மாநிலஅரசுகளும் பத்திரிக்கை சுதந்திரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளன.
எனவே, சிவசுப்பிரமணியம் விஷயத்தில் உண்மையை வெளியுலகுக்குச் சொல்ல வேண்டும். முதலில் அவரைவிடுவிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
பெங்களூரில் நக்கீரன் கோபால்:
இந் நிலையில் நக்கீரன் வார இதழின் ஆசிரியர் கோபால் இன்று பெங்களூர் வந்தார். அவர் கர்நாடக அரசுஅதிகாரிகளைச் சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது.
சிவசுப்பிரமணியத்தை விடுவிக்க கர்நாடக நீதிமன்றத்தின் உதவியையும் அவர் நாடலாம் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications