டெஸ்ட் கிரிக்கெட்: தொடரை இழந்தது இந்தியா

Subscribe to Oneindia Tamil

செஞ்சூரியன் பார்க்:

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 0-2 என்ற கணக்கில் டெஸ்ட்தொடரை இழந்தது.

தென் ஆப்பிரிக்க அணியுடன் நடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் கூட இந்தியா வெற்றி பெறவில்லை.இரண்டு போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வென்றது. இரண்டாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

செஞ்சூரியன் பார்க்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) முடிந்த இறுதி டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 73ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 566 ரன்களைக் குவித்தது. ஆனால் இந்திய அணியோ இரண்டுஇன்னிங்சுகளிலும் சேர்ந்து 493 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தென் ஆப்பிரிக்காவின் ஷான் பொல்லாக் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர் நாயகனாக அதேநாட்டைச் சேர்ந்த கிப்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சர்ச்சைக்குரிய நடுவர் மைக் டென்னஸ் தென் ஆப்பிரிக்க மற்றும் இந்திய கிரிக்கெட் போர்டால் நீக்கப்பட்டதால்,சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த மூன்றாவது டெஸ்டை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+