கிரிக்கெட்: இந்திய அணிக்கு மீண்டும் கங்குலி கேப்டன்
ஜெய்ப்பூர்:
சர்வதேச அளவில் பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கு சவுரவ் கங்குலியே மீண்டும்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான அனைத்துப் போட்டிகளுக்கும் அவர்தான் கேப்டனாக இருப்பார் என்று தேர்வுக் குழுதலைவர் சந்து போர்டே கூறினார்.
ஆனால் சர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய கிரிக்கெட் வீரரான வீரேந்திர ஷேவக்கை மீண்டும் அணியில் சேர்ப்பதுபற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
தற்போது நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் அவர் விளையாடாததிலிருந்தே,அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை முடிந்து விட்டது என்றும் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் போது அவர்இந்திய அணியில் இடம் பெறுவார் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக மொஹாலியில் நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் ஜவஹல் ஸ்ரீநாத்நிச்சயம் இடம் பெறமாட்டார் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications
