சென்னை, பெங்களூரில் இன்று நிருபர்கள் போராட்டம்
சென்னை:
நக்கீரன் நிருபர் சிவசுப்ரமணியத்தை உடனடியாக விடுதலை செய்யக் கோரி பல்வேறு பத்திரிக்கையாளர்கள்சங்கங்கள் சார்பில் சென்னையிலும் பெங்களூரிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
சென்னையில் சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரில் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
கர்நாடக அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிருபர் சிவசுப்ரமணியன் மீது பதிவு செய்யப்பட்டவழக்குகளை திரும்பப் பெற வேண்டும், பொடோ சட்டத்தில் செய்தியாளர்களுக்கு எதிராக உள்ள ஷரத்துக்களைநீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
இதேபோல கர்நாடக மாநிலத்திலும் அரசு தலைமைச் செயலகம் முன்பு நக்கீரன் ஆசிரியர் கோபால் தலைமையில்ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் அசோசியேஷன் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் நேற்று (திங்கள்கிழமை) இச்சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்கூறப்பட்டிருப்பதாவது,
கர்நாடக அதிரடிப்படை போலீசாரால் நக்கீரன் நிருபர் சிவசுப்ரமணியம் அத்துமீறி கைது செய்யப்பட்டிருக்கிறார்.கர்நாடக அதிரடிப்படையின் இந்த அராஜகச் செயலைக் கண்டிப்பதுடன், 48 மணி நேரத்துக்குள் நக்கீரன் நிருபர்சிவசுப்பிரமணியனை விடுவிக்க வேண்டும்.
மேலும் அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறவேண்டுமாறு முதல்வர் கிருஷ்ணாவைக்கேட்டுக்கொள்கிறோம்.
இல்லையேல் தமிழக பத்திரிக்கையாளர்களையும், பத்திரிக்கை அமைப்புகளையும் ஒன்றிணைத்து பெங்களூரில்உள்ள அரசு தலைமைச் செயலகமான விதான் சவுதா முன்பு, நக்கீரன் கோபால் தலைமையில் அறப்போராட்டம்நடக்கும் என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications