தமிழ் எழுத்துக்களை வாசிக்கும் எந்திரம் கண்டுபிடிப்பு
பெங்களூர்:
பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில் தமிழ் எழுத்துக்களைப் படிக்கும் எந்திரத்தை பெங்களூரில் உள்ளஇந்திய அறிவியல் கழக (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ்) பேராசிரியர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.இந்திய மொழிகளில் தமிழில் தான் முதன்முதலாக இந்த வகை எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் மின் பொறியியல் துறையில் பேரசிரியராக பணிபுரிபவர்ராமகிருஷ்ணன். இந்த எந்திரத்தின் கண்டுபிடிப்பில் முக்கியப் பங்காற்றியுள்ள இவர் கூறியதாவது:
பார்வையற்றோர் பரீட்சைக்குப் படிக்கும் போது கூட அவர்களுக்கு ஒரு ஆள் துணை தேவைப்படுகிறது. இதைப்போக்குவதற்காக தற்போது இந்த படிக்கும் எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், இரண்டு கட்டங்களாகசெய்முறைகள் பின்பற்றப்படுகின்றன.
முதலில் ஆப்டிகல் கேரக்டர் ரெகக்னைசன் (ஓ.சி.ஆர்) மூலம் எழுத்துக்கள் அனைத்தும் உள் வாங்கப்படுகின்றன.பிறகு டெக்ஸ்ட் டு ஸ்பீச் (டி.டி.எஸ்) என்பதன் மூலம் உள் வாங்கப்பட்ட எழுத்துக்கள் சத்தத்துடன்படிக்கப்படுகின்றன.
ஓ.சி.ஆரில் அச்சிடப்பட்ட எழுத்துக்கள் முதலில் ஸ்கேன் செய்யப்படுகின்றன. பிறகு ஒவ்வொரு எழுத்திற்கும்ஏற்றவாறு டிஜிடல் பிம்பம் உருவாக்கப்படுகிறது. பிறகு அது டி.டி.எஸ்சுக்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்துதான்சத்தம் வருகிறது.
ஓ.சி.ஆர். மூலம் ஒரு ஏ4 அளவு தாளில் உள்ள சுமார் 1,200 எழுத்துக்களை 2 நிமிடங்களில் ஸ்கேன்செய்துவிடலாம். அதன் பிறகு எழுத்துக்களுக்கேற்ற சத்தத்தை வரிசைப்படுத்துவதற்கு 15 நொடிகள் போதும்.
இந்த கண்டுபிடிப்பில் என்னுடன் சேர்ந்து அபர்னா மற்றும் ஜயவர்த்தனா ராமா ஆகியோரும் ஈடுபட்டனர். இந்தியமொழிகளில் முதன் முதலில் தமிழ் எழுத்துக்களை வாசிப்பதற்குத் தான் இதுபோன்ற எந்திரம்உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
நாங்கள் இன்னும் பல திருத்தங்களைச் செய்வதற்காக முயற்சித்து வருகிறோம். விரைவில் மற்ற மொழிகளுக்கும்இந்த எந்திரத்தைப் பயன்படுத்தும் வகையில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார் பேராசிரியர்ராமகிருஷ்ணன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications