வீரப்பனைப் பிடிக்கவே நிருபர் கைது: தமிழகம்
சென்னை:
கைது செய்யப்பட்ட நக்கீரன் நிருபரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அவர் கொடுக்கும் தகவல்களைவைத்து வீரப்பனை விரைவில் பிடிக்க முடியும் என தமிழக அரசு கூறியுள்ளது.
இது குறித்து தமிழக உள்துறைச் செயலாளர் நரேஷ் குப்தா கூறுகையில், நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியத்தைகைது செய்தது கர்நாடக அதிரடிப் படை தான். இதில் இதில் தமிழக போலீசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை.
இந்த கைது தொடர்பாக கர்நாடக அரசிடம் இருந்து இதுவரை எந்த விவரமும் தமிழகத்து வரவில்லை.சிவசுப்பிரமணியம் கைது தொடர்பாக அம் மாநில டி.ஜி.பி. அவரது உள்துறைச் செயலாளரிடம் ஒரு அறிக்கைகொடுத்திருப்பதாகத் தெரிகிறது.
அந்த அறிக்கை இன்னும் எனக்கு கிடைக்கவில்லை.
சிவசுப்பிரமணியம் கைது தொடர்பாக அனைத்து விவரங்களையும் வெளியில் கூற இயலாது. அது வீரப்பனைப்பிடிக்கும் முயற்சிகளுக்கு இடைஞ்சலாகிவிடும் என்றார் குப்தா.
அப்போது நிருபர்களிடம் அவரிடம், ராஜ்குமாரை மீட்க உதவிய நக்கீரன் பத்திரிக்கையிடம் தமிழகமும்கர்நாடகமும் நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்கின்றனவே. மேலும் வீரப்பனை சந்திக்கச் செல்லும்போதுநக்கீரன் நிருபர் அல்லது கோபாலை கைது செய்ய மாட்டோம் என்று ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியை அரசுமீறிவிட்டதே என்று கேட்டனர்.
இதற்கு பதிலளித்த குப்தா, ராஜ்குமார் விவகாரத்தின்போது மட்டும் தான் அந்த வாக்குறுதி தரப்பட்டது. இதுஎப்போதும் பொருந்தாது என்றார்.
நக்கீரன் ஆசிரியர் கோபாலும் கைது செய்யப்படுவாரா என்று கேட்டபோது, அது குறித்து எனக்குத் தெரியாது எனகுப்தா பதிலளித்தார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications