புதுக்கோட்டையில் விடுதலைப் புலிகள் ஆதரவு கோஷம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் தமிழர் தேசிய இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் விடுதலைப் புலிகள்ஆதரவு கோஷம் எழுப்பப்பட்டது.
தமிழர் தேசிய இயக்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் தமிழர் எழுச்சி நாள் விழா, கவிதை நூல் வெளியீட்டுவிழா மற்றும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழ்க்கள நிதியளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாகொண்டாடப்பட்டது.
சந்தன வீரப்பனின் கூட்டாளி என்று கூறப்படும் முத்துக்குமார் தலைமையில் பேரணி நடத்தப்பட்டது. அப்போதுதனித்தமிழ் நாடு மற்றும் புலிகள் ஆதரவுக் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
"விடுதலைப் புலிகளை அங்கீகாரம் செய்", "எட்டு கோடி தமிழனுக்கு உலகப் பந்தில் நாடு இல்லை என்றால் வெட்டிப்பேச்சு ஏனடா? ", "தனித் தமிழ்நாடு கோரடா", "காவிரியில் தண்ணீர் கொடு, இல்லையென்றால் இந்தியா என்ற நாடுஎதற்கு" என்பன போன்ற கோஷங்கள் பேரணியில் எழுப்பப்பட்டன.
விழா மேடையில் விடுதலைப் புலிகள் தளபதி பிரபாகரனின் படங்கள் தொங்க விடப்பட்டிருந்தன. தமிழர் தேசியஇயக்கத் தலைவர் நெடுமாறன் தலைமையில் பொதுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications