ஜாமீனில் விடுதலையான நக்கீரன் நிருபர் மீண்டும் கைது
சென்னை:
கர்நாடக அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியம் கொள்ளேகால்நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் ஆயுதம் பதுக்கியதாக தொடரப்பட்டுள்ள மற்றொருவழக்கின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியத்தை கர்நிாடக அதிரடிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கொள்ளேகால் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின் அவரை அதிரடிப்படை போலீஸார் விசாரணைக்காகதங்களது காவலின் கீழ் கொண்டு சென்றனர்.
இந்த நிலையில், ஜாமீனில் தன்னை விடுதலை செய்யுமாறு சிவசுப்பிரமணியம் கொள்ளேகால் கோர்ட்டில்மனுத்தாக்கல் செய்தார். இந்தச் சூழ்நிலையில், சிவசுப்ரமணியம் மீது ஆயுதங்களைப் பதுக்கியதாக கர்நாடகஅதிரடிப்படையினர் புதிய புகாரை சுமத்தினர். இதுதொடர்பாக மைசூர் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே கொள்ளேகால் கோர்ட்டில் சிவசுப்பிரமணியத்திற்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனால் விடுதலையாகி வெளியே வந்த சிவசுப்பிரமணியத்தை அதிரடிப்படை போலீஸார் ஆயுதப் பதுக்கல்வழக்கில் கைது செய்து மைசூர் கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு ஆஜர்படுத்தப்பட்ட சிவசுப்பிரமணியத்தை 10 நாள் அதிரடிப்படையினர் காவலில் வைக்க நீதிபதிஉத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications