"கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு ஆபத்தில்லை"
சென்னை:
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தொடர்ந்து பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், அதற்கு ஆபத்து எதுவும்இல்லை என்று அணு சக்தி கமிஷன் தலைவர் டாக்டர் அனில் ககோட்கர் கூறினார்.
"கல்பாக்கத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களிலும் அப்போதைக்குஅப்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் முழு அளவில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இதனால் அங்கு அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நேர்ந்துவிட முடியாது" என்றும் ககோட்கர் கூறினார்.
கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு மேலே சமீபத்தில் பாதுகாப்பையும் மீறி அமெரிக்க ஹெலிகாப்டர் பறந்ததுபற்றி நிருபர்கள் கேட்டபோது, அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று ஏற்கனவே அதிகாரிகள் உறுதிசெய்துவிட்டதாகக் கூறினார் ககோட்கர்.
முன்னதாக, சென்னையில் இன்று (புதன்கிழமை) "இண்டியன் கெமிக்கல் எஞ்சினியரிங் காங்கிரஸ் 2001" என்றமாநாட்டைத் துவக்கி வைத்து அவர் பேசியதாவது:
டிராம்பேயிலும் ராஜஸ்தானிலும் 680 மெகாவாட் திறன் கொண்ட அணுமின் உலைகள் விரைவில் அமைக்கப்படஉள்ளன.
நம் நாட்டில் தற்போது 2,000 மெகாவாட் என்ற அளவில் உள்ள அணுமின் உற்பத்தியின் அளவு அடுத்த பத்துஆண்டுகளில் 10,000 மெகாவாட்டாகவும், 2020ம் ஆண்டில் 20,000 மெகாவாட்டாகவும் அதிகரிக்கப்படும்.
கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் திறன்கொண்ட இரண்டு அணு உலைகள் அடுத்த ஆண்டு மார்ச்சிலிருந்து மேமாதத்துக்குள் உற்பத்தியைத் தொடங்கும் என்றார் ககோட்கர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications