ஒரு மாத போர் நிறுத்தம்: புலிகள் அறிவிப்பு
கொழும்பு:
இலங்கையில் மீண்டும் அமைதியைக் கொண்டு வரும் முயற்சியைத் தொடங்கியுள்ள புதிய பிரதமர் ரணில்விக்கிரமசிங்கேவுக்கு வசதியாக, ஒரு மாத கால போர் நிறுத்தத்தை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைபிரபாகரன் அறிவித்துள்ளார்.
இலங்கை ராணுவத்துக்கு எதிரான தாக்குதலை அன்றைய தினத்திலிருந்து அடுத்த ஆண்டு ஜனவரி 24ம் தேதிநள்ளிரவு வரை நிறுத்திவைக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகளின் அனைத்துப் படைப் பிரிவுகளுக்கும்பிரபாகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த ஒரு மாத காலத்திற்குள் இலங்கை அரசு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்டு விடும் என்றுமுழுமையாக நம்புவதாகவும் பிரபாகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டும் இதுபோலவே கிறிஸ்துமஸ் முதல் ஒரு மாதத்திற்கு போர் நிறுத்தத்தை விடுதலைப் புலிகள்அறிவித்திருந்தனர். பின்னர் அந்தப் போர் நிறுத்த அறிவிப்பு மூன்று முறை நீட்டிக்கப்பட்டது.
ஆனால் விடுதலைப் புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பை அப்போது ஆட்சியிலிருந்த சந்திரிகா குமாரதுங்கா அரசுதொடர்ந்து நிராகரித்து வந்ததால், கடந்த ஏப்ரல் 25ம் தேதியுடன் போர் நிறுத்தத்தை விடுதலைப் புலிகள் முடித்துக்கொண்டனர்.
பொதுவாகவே தைப் பொங்கல், தமிழர் புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு சமயங்களில் விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் செய்வது வழக்கம்.
இலங்கை அரசுக்கு எச்சரிக்கை கலந்த வாய்ப்பாகவே இத்தகைய போர் நிறுத்தங்களை விடுதலைப் புலிகள்அறிவித்து வந்துள்ளனர். ஆனால் இதுவரை பதவியில் இருந்த அரசுகள் எல்லாமே இந்தப் போர் நிறுத்தங்களைஅலட்சியப்படுத்தியே வந்தன.
தற்போது பதவியேற்றுள்ள ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியாவது இந்தப் போர் நிறுத்த அறிவிப்பை மதித்து,இலங்கையில் அமைதி ஏற்படுத்தும் முயற்சியில் வெற்றி பெறும் என்று விடுதலைப் புலிகள் நம்பிக்கைவெளியிட்டுள்ளனர்.
அரசின் நிலைப்பாட்டைப் பொறுத்து போர் நிறுத்த அறிவிப்பை நீட்டிக்கவும் விடுதலைப் புலிகள் முடிவுசெய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications