ஜெ. மீதான நிலக்கரி ஊழல் வழக்கில் நாளை தீர்ப்பு
சென்னை:
ஜெயலலிதா மீதான நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கின் தீர்ப்பு நாளை (வியாழக்கிழமை) வழங்கப்படஉள்ளது.
ஜெயலலிதா மீது கடந்த திமுக ஆட்சி காலத்தில் பல ஊழல் வழக்குகள் போடப்பட்டன. திமுக ஆட்சியிலேயேகடந்த அக்டோபர் மாதம் டான்சி வழக்கில் அவருக்கு மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை அளித்து சிறப்பு தனிநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இதனால் அவர் கடந்த தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது. ஆனாலும் அவரது கட்சி வெற்றி பெற்றுஆட்சிக்கு வந்தது.
இதற்கிடையே டான்சி மற்றும் கொடைக்கானல் ஓட்டல் வழக்குகளில் தனக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்துஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.
மனுக்களை விசாரித்த நீதிபதி தினகர், அந்த இரண்டு வழக்குகளிலும் இருந்து கடந்த 4ம் தேதி அவரை விடுதலைசெய்து தீர்ப்பளித்தார்.
இதனால் வரும் இடைத் தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடவும் ஜெயலலிதா முடிவு செய்திருந்தார்.
இதற்கிடையில் கடந்த அதிமுக ஆட்சியில் நிலக்கரி இறக்குமதியில் ஜெயலலிதா ஊழல் செய்ததால் அரசுக்குரூ.6.50 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் தனி நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடந்து வந்தது.
ஜூன் 1999ல் இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி வி.ராதாகிருஷ்ணன் ஜெயலலிதாவை இந்தவழக்கு விசாரணையில் இருந்து விடுவித்தார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவழக்கிலும் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டது சரிதான் என்று தீர்ப்பு வந்தது.
ஆனால் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது. இதைவிசாரித்த உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவை மீண்டும் விசாரிக்க ஆணையிட்டது. இதையடுத்து சிறப்பு நீதிமன்றத்தில்மீண்டும் விசாரணை நடந்து வந்தது.
அனைத்து சாட்சிகளின் விசாரணையும் முடிந்துவிட்ட நிலையில் சிறப்பு நீதிமன்றம் இந்த வவக்கில் நாளை(வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்க இருக்கிறது.
இந்த தீர்ப்பும் ஜெயலலிதாவுக்கு சாதகமாக இருந்தால் தான் அவரால் இடைத் தேர்தலில் போட்டியிட்டு முதல்வராகமுடியும்.












Click it and Unblock the Notifications