தடை விலகியது: ஆண்டிப்பட்டியில் ஜெ. நிச்சயம் போட்டி
சென்னை:
நிலக்கரி ஊழல் வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுவிட்டதால், வரும் இடைத் தேர்தலில் போட்டியிடஅவருக்கு இருந்த அனைத்துத் தடைகளும் விலகிவிட்டன.
முன்பு டான்சி, பிளசண்ட் ஸ்டே வழக்கிலிருந்து விடுதலையான அவருக்கு நிலக்கரி ஊழல் வழக்கு பிரச்சனையாகஇருந்தது. இப்போது இந்த வழக்கிலும் அவர் விடுதலையாகிவிட்டார்.
இதனால், வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி தமிழகத்தில் ஆண்டிப்பட்டி, வாணியம்பாடி, சைதாபேட்டை ஆகியதொகுதிகளுக்கு நடக்கும் இடைத் தேர்தலில் அவர் போட்டியிட வழி உருவாகிவிட்டது.
முன்னதாக ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் முதல்வர் பதவியில் நீடிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம்தீர்ப்பளித்ததால் முதல்வர் பதவியை ஜெயலலிதா ராஜினமா செய்துவிட்டு பன்னீர் செல்வத்தை முதல்வராக்கினார்.
ஊழல் வழக்கில் சிறை தண்டனை தரப்பட்டதால் இவரால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாமல்போனது. இப்போது தேர்தலில் போட்டியிடத் தடையாக இருந்த வழக்குகளில் இருந்து ஜெயலலிதாவிடுவிக்கப்பட்டுவிட்டார்.
இன்று நிலக்கரி ஊழல் வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி தர்வேஸ் தனது தீர்ப்பில்கூறியதாவது:
மின்துறைக்கு நிலக்கரி வாங்கியதில் ஊழல் நடந்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை. இதனால், அரசுக்கு ரூ. 6.50கோடி நஷ்டம் ஏற்பட்டது குறித்தும் நிரூபிக்கப்படவில்லை என்றார்.
முதல்முறையாக ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழக மின்துறைக்கு ஆஸ்திரேலியா மற்றும்இந்தோனேஷியாவிலிருந்து இருந்து 1992-93ம் ஆண்டில் நிலக்கரி வாங்கப்பட்டது. இதில் அதிக அளவில்சாம்பல் இருந்ததாகவும், தரக் குறைவான இந்த நிலக்கரியை வாங்க ஜெயலலிதா, அப்போதைய மின்துறைஅமைச்சர் கண்ணப்பன் உள்ளிட்ட 10 பேரும் பல கோடிகளை லஞ்சம் வாங்கியதாகவும் புகார் கூறப்பட்டது.
இப்போது இந்த வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலையாகிவிட்டார். இதனால், அவர் ஆண்டிப்பட்டியில்போட்டியிடுவார். அங்கு அவரது வெற்றியும் நிச்சயம் என்பதால் அவர் மீண்டும் முதல்வராவது நிச்சயமாகிவிட்டது.












Click it and Unblock the Notifications