இந்திய படைகள் மீது பாகிஸ்தான் ராக்கெட் தாக்குதல்
ஜம்மு:
எல்லைப் பகுதிகளில் உள்ள இந்தியப் படைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று (திங்கள்கிழமை) பயங்கரராக்கெட் தாக்குதல் நடத்தினர்.
இன்று காலை 9 மணிக்கெல்லாம் காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியை நோக்கு பாகிஸ்தான் ராணுவத்தினர்சராமாரியாகத் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.
இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வசிக்கும் பகுதியிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து சுமார் 2,000 பேர் அப்பகுதியில் உள்ள கிராமங்களிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பின்னர் எல்லையில் பதற்றம் அதிகரிக்கத்தொடங்கியதிலிருந்து பாகிஸ்தான் நடத்தியுள்ள மிகப் பெரிய தாக்குதல் இது என்று கூறப்படுகிறது.
மல்டி-பெரல் ராக்கெட் லாஞ்ச்சர்கள் மூலமாகத்தான் அவர்கள் ராக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளனர். மோர்ட்டார்ரக குண்டுகள் மற்றும் கடுமையான வெப்பத்தைக் கொடுக்கும் பீரங்கி எதிர்ப்பு வெடிகுண்டுகள் ஆகியவற்றைக்கொண்டும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.
இச்சம்பவத்தில் 3 பேர் காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய ராணுவத்தினரும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது இவர்கள்ஷெல் குண்டுத் தாக்குதல் நடத்தினர். ஆனால் சேத விவரம் குறித்து தகவல் இல்லை.
இந்தியாவுக்குள் ஊடுருவிய 8 தீவிரவாதிகள் பலி:
இதற்கிடையே இதே பூஞ்ச் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற 8 பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியப் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஒரு பக்கம் இந்தியப் படைகளை நோக்கி கடுமையான ராக்கெட் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்த பாகிஸ்தான்ராணுவத்தினர், மறு பக்கம் தீவிரவாதிகளை எல்லையைத் தாண்டி இந்தியாவுக்குள் அனுப்ப முயற்சித்துக்கொண்டிருந்தனர்.
பயங்கரமான ஆயுதங்களுடன் சுமார் 15 தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சித்தனர்.
ஆனால் இந்தியப் பாதுகாப்புப் படையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து தீவிரவாதிகள் கிரனைட்குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.
பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபடவே, அங்கு பயங்கரமான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில்8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் தப்பித்து மீண்டும் பாகிஸ்தானே நோக்கி ஓட ஆரம்பித்தனர்.
இதற்கிடையே மஞ்சாக்கோட் பகுதியில் நடந்த மற்றொரு துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications