வீரப்பனுக்குப் பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என்கிறார் நெடுமாறன்
சென்னை:
வீரப்பனை ஒரு மனிதனாக மதித்து அவனுக்குப் பொது மன்னிப்பு அளிக்க வேண்டும் தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை, வீரப்பன் விவகாரம், பொடோ உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்துதட்ஸ்தமிழ்.காம் நிருபருக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி:
வீரப்பன் பிரச்சினை ஒரு சட்டம் ஒழுங்குப் பிரச்சினை அல்ல. இது சமூக பொருளாதார பிரச்சினை. வீரப்பன்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும் என்றால் அவனுக்குப் பொதுமன்னிப்பு அளிக்கப்பட வேண்டும்.அவனையும் மனிதனாக ஏற்க வேண்டும்.
பொதுமன்னிப்பு அளித்தால் சரண் அடையத் தயார் என்று முன்பு பலறை வீரப்பன் என்னிடம் தெரிவித்த தகவலைமத்திய, மாநில அரசுகளுக்கு நான் தெரிவித்தேன். ஆனால் இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை.
வீரப்பனைப் பிடிக்க முடியாத மாநில அரசும், போலீசாரும், ராஜ்குமாரை மீட்க உதவிய நக்கீரன் நிருபர்சிவசுப்ரமணியத்தை கைது செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வீரப்பனைப் பிடிப்பதை விட்டுவிட்டு இப்படி பழிவாங்கும் செயலில் அரசும், போலீஸும் இறங்கியிருப்பதுகடுமையாக கண்டிக்கத்தக்கது.
விக்கிரமசிங்கேவுக்கு இதுதான் கடைசி வாய்ப்பு:
இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கேவின் கட்சிக்கு தமிழர்கள் அளித்துள்ள வாக்குகள், இலங்கைத் தமிழர்பிரச்சினையை சுமூகமான முறையில் தீர்ப்பதற்கு விக்கிரமசிங்கேவுக்குக் கொடுக்கப்பட்டுள்ள கடைசி வாய்ப்பு.
விடுதலைப் புலிகளுக்கும், ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் இடையே ரகசிய உறவு உள்ளது. ரணில்விக்கிரமசிங்கேவுக்கு கிடைக்கும் வாக்குகள் விடுதலைப் புலிகளுக்குக் கிடைக்கும் வாக்குகள் என தேர்தல்பிரசாரத்தின்போது சந்திரிகா பெரிதாக பிரசாரம் செய்தார். ஆனால் அவரது பிரசாரத்தை மக்கள் நிராகரித்துவிட்டனர். சிங்களர்களே அதை ஏற்கவில்லை.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ரணில் விக்கிரமசிங்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நார்வே மத்தியஸ்தசமாதானப் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடர வேண்டும். புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
விடுதலைப் புலிகள்தான் தமிழர்களின் ஒரே பிரதிநிதி என்பதை தமிழர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதையேஇந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. எனவே உண்மையை உணர்ந்து ரணில் விக்கிரசிங்கே பேச்சுவார்த்தைநடத்த முன் வர வேண்டும். இது அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள கடைசி வாய்ப்பு என்பதை விக்கிரமசிங்கேபுரிந்து கொள்ள வேண்டும்.
விடுதலைப் புலிகள் மீதான தடையை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும்.
பொடோ தேவையா?
பொடோ சட்டம் தேவையில்லாத ஒன்று. இது ஒரு அடக்குமுறை சட்டம். இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டியஅவசியம் என்ன என்பதை விளக்க முடியாத நிலையில் இந்திய அரசு உள்ளது.
ஏற்கனவே இந்திய பாதுகாப்புச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம், கிரிமினல் சட்டத்தின் பல பிரிவுகள்,பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்குத் தேவையான அதிகாரங்களுடன் உள்ளன. எனவே புதிதாக ஒரு சட்டம் ஏன்?
தடா சட்டம், முன்னாள் மிசா சட்டம் ஆகியவை எந்தளவுக்குத் தவறாக பயன்படுத்தப்பட்டன என்பதை நாடறியும்.ஏன், பிரதமர் வாஜ்பாய், அத்வானி மற்றும் இப்போது எதிர்க்கட்சி வரிசையில் உள்ள பல தலைவர்களும் மிசாசட்டத்தின் கீழ் அடக்குறையாக கைது செய்யப்பட்டவர்கள்தானே?
அப்போது மிசா சட்டம் மிகக் கொடுமையானது என்று இவர்கள் வர்ணித்தார்கள். இப்போது இவர்களேஅதுபோன்ற ஒரு சட்டத்தை அமல்படுத்த முயல்வது சரியா?
பொடோ சட்டத்தை முதன் முதலில் எதிர்த்தவர்கள் நாங்கள்தான். சென்னையில் மனிதசங்கிலிப் போராட்டம்நடத்தினோம். தொடர்ந்து மாநிலம் முழுவதிலும் எதிர்ப்புக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறோம்.
சட்டக் கல்லூரி மோதல்:
சட்டக் கல்லூரிக்குள் புகுந்து, மாணவர்களை போலீசார் அடித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.காட்டுமிராண்டித்தனமாக, கல்லூரி முதல்வரின் அனுமதியில்லாமல் கல்லூரி விடுதிக்குள் போலீஸார் நுழைந்ததுசட்டவிரோதமானது. மாணவர்களை குறிவைத்து ஆயுதங்களுடன் புகுந்து தாக்கியுள்ளனர்.
ஒவ்வொரு அறையாக புகுந்து மாணவர்களை அடித்திருப்பது பெரிய குற்றமாகும். சம்பந்தப்பட்ட போலீஸ்அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அரசு உதவ வேண்டும்.
ஜெ. முதல்வராகலாமா?
சட்டப்படி, ஜனநாயக முறைப்படி தேர்தலில் நின்ற பிறகு ஜெயலலிதா முதல்வராகலாம். அதுதான் அவருக்கும்நல்லது, ஜனநாயகத்திற்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது என்றார் நெடுமாறன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications