தேர்தல் விதிகளை மீறுகிறது அதிமுக: வைகோ புகார்
தேனி:
ஆண்டிப்பட்டி தொகுதியில் ஆளுங்கட்சியினர் தேர்தல் விதிமுறைகளை மீறி வருகின்றனர், இதுகுறித்து தேர்தல்கமிஷன் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி ஆண்டிப்பட்டி உட்பட மூன்று தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறஉள்ளது. ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
ஆண்டிப்பட்டியில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஆண்டிப்பட்டி தொகுதி மக்களை ஏமாற்ற, பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை அரசு மேற்கொண்டுவருகிறது. ஆண்டிப்பட்டி தொகுதியில் முழுமையாக தேர்தல் விதிமுறைகளை மீறி வருகிறது.
அரசு இயந்திரங்கள் முழுக்க முழுக்க தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆளுங்கட்சியினர் விருப்பப்படி அரசுஅதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். 20,000க்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில்சேர்க்க அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் செய்யப்படும். இந்த விதிமுறை மீறல் குறித்து விசாரிக்க தேர்தல் கமிஷன்உடனடியாக தேர்தல் பார்வையாளர்களை அனுப்பி கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தல் விளம்பரங்களுக்காக அதிமுக பல கோடி ரூபாய் செலவு செய்து வருகிறது. அரசு சுவர்கள், பள்ளிகட்டிடங்களில் கூட தேர்தல் விளம்பரங்கள் எழுதப்பட்டுள்ளன.
மற்ற கட்சி பிரமுகர்களையும் அதிமுகவுக்கு இழுக்க முயற்சி நடைபெற்று வருகிறது. மதிமுகவினர் யாரும் இந்தவலையில் சிக்க மாட்டார்கள். கட்சி பிரமுகர்களை விலைக்கு வாங்கினாலும், மக்களை விலைக்கு வாங்க முடியாது.வாக்காளர்கள் சிந்தித்து இந்த முறை வோட்டு போட வேண்டும் என்று அவர் கூறினார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications