காண்டஹாரில் அல்கொய்தா தீவிரவாதி தற்கொலை
காண்டஹார்:
காண்டஹார் மருத்துவமனையில் பெண்கள் பிரிவில் மறைந்திருந்த அல்கொய்தா தீவிரவாதிகளில் ஒருவன்தற்கொலை செய்து கொண்டான்.
உடனடியாக ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் படை அந்த மருத்துவமனைப்பகுதியை சுற்றி வளைத்தது. அதனால்அவர்களால் தப்பிக்க முடியவில்லை.
மருத்துவமனையாக இருப்பதால் அவர்களாக வெளியில் வரும் வரை மனிதாபிமான அடிப்படையில் நாங்கள்அவர்களைத் தாக்க மாட்டோம் என்று பாதுகாப்புப் படை அதிகாரிகளும் கூறியிருந்தனர்.
அமெரிக்கப்படைகளின் விமான குண்டு வீச்சில் காயமடைந்து சிகிச்சைக்காக இங்கு சேர்க்கப்பட்டிருந்தனர் இந்தத்தீவிரவாதிகள்.
இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை மருத்துவமனை வளாகத்தின் அருகில் ரத்தவெள்ளத்தில் ஒருஅல்-கொய்தா தீவிரவாதி இறந்து கிடந்தான்.
உடம்பில் வெடிகுண்டைக் கட்டிக் கொண்டு அதை இயக்கி இவன் தற்கொலை செய்து கொண்டதாகக்கூறப்படுகிறது.
இவன் பெயர் முகமது ரசூல் என்று பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறினர்.
இன்னும் 7 அல்-கொய்தா தீவிரவாதிகள் தொடர்ந்து அந்த மருத்துவமனையின் பெண்கள் பிரிவில் ஒளிந்துள்ளனர்என்றும் கூறப்படுகிறது.
இதற்கு முன்பே மறைந்திருந்த இவர்களை பிடிக்க முற்பட்ட போது அவர்கள் தற்கொலைக்கு முயன்றனர். அதனால்நாங்கள் அவர்களை பிடிக்காமல் விட்டு விட்டோம் என்று கூறினார் ஒரு அதிகாரி.












Click it and Unblock the Notifications