பாகிஸ்தானுக்கு தொடர்ந்து ஆயுத சப்ளை செய்வோம்: சீனா
பீஜிங்:
பாகிஸ்தானுக்கு எப்போதும் போல் தொடர்ந்து ஆயுதங்களை சப்ளை செய்வோம். ஆனால் போருக்காக அதிகமானஆயுதங்களையெல்லாம் நாங்கள் அனுப்பவில்லை என்று சீனா கூறியுள்ளது.
அடிக்கடி எல்லையில் இரு தரப்பு ராணுவ வீரர்களிடையே துப்பாக்கி சூடும் நடந்து வருகிறது. இதனால் எல்லையில்பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. எப்போது வேண்டுமானாலும் போர் மூளும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு கப்பல் கப்பலாக போர் விமானங்களையும் ஆயுதங்களையும் சீனா சப்ளைசெய்துள்ளது. 5 கப்பல்கள் மூலம் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்துக்கு இவை அனுப்பி வைக்கப்பட்டதாக "திநியூஸ்" பத்திரிக்கை கூறியுள்ளது.
அசெம்பிள் செய்யப்படாத எப்-7எம்ஜி ரக போர் விமானங்கள் 40 ம், போர் விமானங்களில் பயன்படுத்தப்படும்ஆயுதங்களும் இக்கப்பல்களில் சீனாவால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் கடந்த மாதமேபாகிஸ்தானுக்கு வந்து சேர்ந்துவிட்டன.
இந்நிலையில் போரைக் கருத்தில் கொண்டெல்லாம் நாங்கள் இவற்றை அனுப்பவில்லை. வழக்கமாக அனுப்புவதுபோலத்தான் இப்போதும் பாகிஸ்தானுக்கு விமானங்களையும் ஆயுதங்களையும் சப்ளை செய்துள்ளோம் என்று சீனவெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அந்தப் பத்திரிக்கையில் கூறப்பட்டது போல் விரைவாகவும் அனுப்பவில்லை. இந்திய-பாகிஸ்தான் எல்லையில்ஏற்பட்டுள்ள பதற்றத்துக்கும் இதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும் அந்த அதிகாரி கூறினார்.












Click it and Unblock the Notifications