பொது வேட்பாளர்: கருணாநிதி மீது சுவாமி குற்றச்சாட்டு
சென்னை:
ஜெயலலிதாவை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சி தோல்வியடைந்ததற்கு திமுக தலைவர்கருணாதிதான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
வரும் பிப்ரவரி 21ம் தேதி ஆண்டிப்பட்டி உட்பட மூன்று தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன்முடிவு செய்துள்ளது. இதனால் ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் போட்டியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டால் அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டார்.
ஆனால் சில கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் அதனை ஆதரிக்க வில்லை. இந்நிலையில் திமுக 3 தொகுதிகளிலும்வேட்பாளரை நிறுத்தும் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் சுப்ரமணியசாமி சென்னையில் நிருபர்களிடம்கூறியதாவது:
ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்துவதில் எதிர்க்கட்சிகள்தோல்வி அடைந்து விட்டன.
இதற்கு முழு பொறுப்பும் கருணாநிதியையே சேரும். அவருக்கு அந்த கடமை இருக்கிறது.
உத்தரபிரதேச இடைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக அணிகள் தோல்வியடையும். 3வது அணி தான்ஆட்சியமைக்கும்.
இந்த வலுவான புதிய அணியை அமைக்கும் முயற்சியில் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் ஈடுபட்டுள்ளார் என்றுகூறினார் சுவாமி.
புலிகளை அனுமதிக்க சுவாமி எதிர்ப்பு:
இதற்கிடையே சென்னையில் விடுதலைப் புலிகளைத் தங்க வைப்பதற்கு சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்பிரபாகரன் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதாலும் அவர்களை இந்தியாவில் தங்க அனுமதிக்கக் கூடாதுஎன்று சுவாமி கூறியுள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications