எல்லைப் பிரச்சனை: பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது ஐ.நா.
ஐக்கிய நாடுகள்:
இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே தற்போது ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க உதவ வேண்டும் என்றபாகிஸ்தானின் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபையின் பாதுகாப்புக் குழு நிராகரித்து விட்டது.
இந்திய-பாகிஸ்தான் பதற்றத்தைத் தணிக்கும் விஷயத்தில் ஐ.நா. பாதுகாப்புக் குழு தலையிட வேண்டும் என்றுஐ.நாவுக்கான பாகிஸ்தான் தூதர் ஷாம்ஷத் அகமது கான் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் உறுப்பினர்களாக உள்ள 15 நாடுகளும் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கமறுத்துவிட்டன.
காஷ்மீர் பிரச்சனை என்பது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள பிரச்சனை. இதில் நாங்கள்தலையிட முடியாது என்று அந்த 15 நாடுகளும் கூறிவிட்டன.
மேலும் இதைப் பற்றிப் பேசுவதற்கு அந்த உறுப்பு நாடுகள் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை. இந்தப்பிரச்சனை குறித்து ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் தலைவர் கருத்துக் கேட்டபோது, அனைவரும் பேசாமல்அமைதியாகவே இருந்துவிட்டனர்.
இதையடுத்து பாகிஸ்தானின் கோரிக்கையை ஐ.நா. பாதுகாப்புக் குழு நிராகரித்து விட்டது. தீவிரவாதத்தைஎதிர்ப்பதுதான் எங்களுடைய முக்கியப் பணி என்றும அது கூறிவிட்டது.
காஷ்மீரில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வரும் தீவிரவாத அமைப்புகளை உடனடியாக முடக்கி வைக்கவேண்டும் என்றும் பாகிஸ்தானுக்கு ஐ.நா. பாதுகாப்புக் குழு அறிவுறுத்தியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications