ஆண்டிப்பட்டியில் ஜெ. தோற்க வேண்டும்: இளங்கோவன் நப்பாசை
சென்னை:
ஆண்டிப்பட்டியில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டு தோற்க வேண்டும் என்பதேஎன்னுடைய எண்ணம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
இது குறித்து இளங்கோவன் கூறியதாவது:
மதச்சார்பற்ற கூட்டணியில் இடம் பெற்றிருந்த அதிமுகவை தவிர்த்து அத்தனை கட்சிகளும் இப்போது ஒன்றாகஇணைந்துள்ளோம்.
நாங்கள் இணைந்து செயல்படுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. தமாகா, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் எங்களுக்குஒத்த கருத்து உள்ளது.
தனி அணி அமைப்பது குறித்து 2 அல்லது 3 நாளில் தேவைப்பட்டால் தமாகா தலைவர் வாசனை சந்திப்பேன்.அப்போது கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படும்.
இடைத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் அல்லாத மதச்சார்பற்ற அணி உருவாவதற்கு இந்த இடைத்தேர்தல் காரணமாகஅமையும்.
ஆண்டிப்பட்டியில் தேர்தலுக்காக ஏராளாமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது ஒரு தவறான முன் உதாரணம்.
கடந்த 1996ம் ஆண்டு தேர்தலில் பர்கூரில் போட்டியிட்ட போது கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்தார்.ஆனால் தோல்வியடைந்தார். மக்கள் முடிவு எடுத்துவிட்டால் அவர்களை திசை திருப்ப முடியாது.
ஆண்டிப்பட்டியில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டு, தோல்வி அடைய வேண்டும்என்பதே எண்ணம் என்று இளங்கோவன் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications