இந்தியாவிலேயே பேச்சு நடத்த புலிகள் கோரிக்கை
மல்லவி (இலங்கை):
நார்வே குழுவினருடன் தாங்கள் நடத்தும் பேச்சுவார்த்தையை தென்னிந்தியாவிலேயே நடத்துவதற்கு அனுமதிஅளிக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் விடுதலைப் புலிகளிடமிருந்து எந்த ஒரு கடிதமும் தங்களுக்கு வந்து சேரவில்லை என்று இந்தியவெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று (புதன்கிழமை) விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் எஸ்.பி. தமிழ்செல்வன்நிருபர்களிடம் பேசுகையில், பேச்சுவார்த்தையை தென்னிந்தியாவில் நடத்துவதற்கு இந்தியா அனுமதி அளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
நார்வே குழுவினருடன் நடக்கவுள்ள பேச்சுவார்த்தையில் இந்திய அரசின் பங்கு முக்கியமானது என்று நாங்கள்கருதுகிறோம் என்று கூறிய தமிழ்செல்வன், எதிர்காலத்திலும் இந்தியாவின் உதவி எங்களுக்கு அதிகம்தேவைப்படுகிறது என்றும் கூறினார்.
கடந்த 18 ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தி வந்த நாங்களும் இலங்கை அரசுமே தற்போது பேச்சுவார்த்தைநடத்தலாம் என்று முடிவெடுத்துவிட்ட பிறகு, இந்தியா எங்களுக்கு உதவுவதில் தவறே இல்லை என்றும்தமிழ்செல்வன் கூறினார்.
சிறுநீரக நோயால் அவதிப்படும் பாலசிங்கம் சிகிச்சை மேற்கொள்வதற்கு தென்னிந்தியாதான் பொருத்தமான இடம்என்று நாங்கள் கருதுகிறோம். அதனாலேயே பேச்சுவார்த்தையை அங்கு நடத்துவதற்கு அனுமதி அளிக்கவேண்டுகிறோம் என்றும் தமிழ்செல்வன் தெரிவித்தார்.
போர்நிறுத்தத்தை நீட்டிக்க நார்வே கோரிக்கை:
இதற்கிடையே விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் தாங்கள் அறிவித்துள்ள ஒருமாத கால போர்நிறுத்தத்தைநீட்டிக்க வேண்டும் என்று நார்வே பேச்சுவார்த்தைக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பேச்சுவார்த்தை முழு வெற்றி அடைவதற்கு இந்த நிரந்தரப் போர்நிறுத்தம் உதவும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
நார்வே தூதுக் குழுவில் உள்ள எரிக் சோல்ஹைம் மற்றும் ஜெர்ஸ்டி டிராம்ஸ்டால் ஆகியோர் நேற்றுபாலசிங்கத்துடன் இதுகுறித்து விவாதித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications