இந்திய விமானங்களுக்கு நவீன தொழில்நுட்பம்: ரஷ்யா உதவி
லண்டன்:
இந்திய விமானங்கள் ரேடார்களில் சிக்காத வகையில் நவீன தொழில்நுட்பத்தை வழங்கி ரஷ்யா உதவியுள்ளது.
இது குறித்து பாதுகாப்பு தொடர்பான வார இதழான ஜேன்ஸ் வீக்லி வெளியிட்டுள்ள செய்தி:
மிக்-21-93 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானங்கள் ஸ்டெல்த் ரகத்தைச் சேர்ந்தவை. முதல்கட்டமாக இப்போதுஇந்தியாவின் வசம் உள்ள மிக்-21பி ரக குண்டுவீச்சு விமானங்கள் மிக்-21-93 ரக விமானங்களாக மாற்றப்பட்டுவருகின்றன.
கடந்த ஆண்டு இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரஷ்யா சென்றிருந்போது நிசினி நோவோகோரோட் என்றஇடத்தில் உள்ள சோகோல் விமானத் தயாரிப்பு நிறுவனத்தைப் பார்வையிட்டனர். அப்போது அந்த நிறுவனம்தனது நவீன மிக் விமானங்களைக் காட்டியது. இந்தியாவுக்கு அதைத் தரத் தயாராக இருப்பதாகவும் ரஷ்யாதெரிவித்தது.
கடந்த மே மாதத்தில் இந்திய விமானப் படை அதிகாரிகள் முன்னிலையில் அந்த விமானங்களின் திறன் இயக்கிக்காட்டப்பட்டன. இதையடுத்து இந்திய பைலட்டுகள் பல குழுக்களாக ரஷ்யா சென்று அந்த விமானங்களைஇயக்கிப் பார்த்தனர். இந்த விமானங்களை விரட்டிச் சென்ற விமானங்களின் ரேடார்களில் கூட இவை சிக்காமல்பறந்தன. இதையடுத்து இந்த விமானங்களை வாங்கலாம் என விமானப் படையின் டெஸ்ட் பைலட்கள் இந்தியபாதுகாப்பு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் 2 மிக்-21-93 விமானங்களை இந்தியாவிடம் ரஷ்யா சோதனைக்காகவழங்கியுள்ளது.
ரேடார்களில் இருந்து வரும் மின்னணு அலைகளை இந்த விமானங்கள் தன்னுள்ளே உறிஞ்சிக் கொள்ளும்திறனுடயவை. RAM எனப்படும் ரேடார் அப்ஸார்பன்ட் மெடீரியல் கவசம் கொண்டது இந்த விமானம்.
மாஸ்கோவில் உள்ள மின்னணு ஆராச்சி நிறுவனம் இந்த கவசத்தைத் தயாரித்துள்ளது. இது ரேடார் அலைகளைதன்னுள் வாங்கிக் கொள்ளும் என்பதால் எதிரி நாட்டு ரேடார்களின் கண்ணில் படாது.
விமானப் படையின் பரிந்துரையை ஏற்ற இந்திய அரசு முதல்கட்டமாக 125 மிக் விமானங்களை மிக்-21-93 ரகவிமானங்களாக மாற்ற முடிவு செய்தது. மகாராஷ்டிரத்தில் நாசிக் நகரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்நிறுவனம் ரஷ்ய உதவியுடன் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக இந்தியா 340 மில்லியன் டாலர்களைசெலவிட்டுள்ளது.
இந்த விமானங்களுக்கு மிக்-211 என இந்தியா பெயரிட்டுள்ளது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால்மேம்படுத்தப்பட்ட ஒரு விமானமும் வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டுவிட்டது.
இந்தியாவே தயாரிக்கும் நவீன தொழில்நுட்பம்:
ரஷ்யாவிடம் உதவி பெற்று வரும் அதே நேரத்தில் ஹைதராபாத்தில் உள்ள இந்தியாவின் சி.எம்.ஆர்.ஐ. ஆய்வுப்பிரிவும் ஸ்டெல்த் தொழில்நுட்பத்துக்குத் தேவையான ரேடார் அலை உறிஞ்சும் கவசத்தைத் தயாரித்து வருகிறது.தன்னிடம் உள்ள ஜாகுவார் ரக விமானங்களில் முதலில் இதைப் பயன்படுத்தி இந்தியா சோதனையிட்டு வருகிறது.
இந்தத் தொழில்நுட்பத்தை மிராஜ்-2000 விமானத்திலும் இந்தியா பயன்படுத்தவுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications