நக்கீரன் நிருபரை விடுதலை செய்ய பத்திரிக்கையாளர் சங்கம் கோரிக்கை
சென்னை:
நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியத்தை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள்அமைத்த உண்மைக் கண்டறியும் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியத்தை போலீசார் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் வீட்டுக்கு அருகில் கைதுசெய்தது. பிறகு சில நாட்கள் கழித்து அவரை கர்நாடகா போலீசார் கைது செய்ததாக அறிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிக்கையாளர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டது. பிறகு சென்னைபத்திரிக்கையாளர்கள் சங்கம், சென்னை நிருபர்கள் சஙகம் உட்பட நான்கு சங்கங்கள் இணைந்து உண்மை அறியும்குழு என்று ஒரு குழுவை அமைத்தது.
இந்த குழுவில் ரேவதி, சாவித்திரி கண்ணன், சுரேஷ்குமார், ஜீவா ஆகியோர் இந்த குழுவில் பங்கு கொண்டனர்.இவர்கள் நக்கீரன் நிருபரை கடத்தினார்களா, அல்லது கைது செய்தார்களா என்பது பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணை முடிந்து விட்ட நிலையில் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.எம். பாலசுப்பிரமணியம்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாங்கள் சிவசுப்பிரமணிம் வீட்டிற்கு அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தோம். சிவசுப்பிரமணியத்தை, அவரதுவீட்டிற்கு 100 அடி தூரத்தில் இருந்து நவம்பர் 20ம் தேதி அடையாளம் தெரியாதவர்களால் சிமெண்ட் வர்ணம்பூசப்பட்ட ஜீப் ஒன்றில் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் அவரை கர்நாடகா மாவட்டம் மைசூருக்கு அருகில் யதுரல்லா வனப்பகுதியில் சந்தேகப்படும்படிநடமாடியதால் கைது செய்ததாகவும், வீரப்பனுக்கு உதவியது முதல் பல வழக்குகளில் அவருக்கு தொடர்புஇருப்பதாகவும் கர்நாடகா போலீசார் தெரிவித்தனர்.
கர்நாடகா போலீசாரும், தமிழக போலீசாரும் சேர்ந்து அவரை வேண்டுமென்றே கடத்திச் சென்று, நக்கீரன் ஆசிரியர்கோபாலுக்கு எதிராக சாட்சியம் அளிக்க சொல்லி மிரட்டியுள்ளனர். இப்போது அவருக்கும், நடிகர் ராஜ்குமார்கடத்தலுக்கும் சம்பந்தமுள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
அவரை உண்மையாகவே போலீஸ் கைது செய்ய அழைத்துச் சென்றது என்று சொன்னால், கைது செய்த உடனேஅவரது குடும்பத்திற்கோ உறவினர்களுக்கோ உடனடியாக போலீசார் தகவல் தெரிக்க வேண்டும். ஆனால்அவர்கள் தெரிவிக்கவில்லை.
எனவே அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக, கர்நாடக அரசுகளுக்கு கேட்டுக்கொள்கிறோம் என்று பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications