காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 4 தீவிரவாதிகள் உள்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பான்டிப்போரா பகுதியில் ராணுவத்தினரின் தேடுதல் வேட்டையில் 3தீவிரவாதிகள் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகள் பதுங்கியிருந்த ஒரு இடத்தைச் சுற்றி வளைத்தபோது, அவர்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கிசராமாரியாகத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.

பாதுகாப்புப் படையினர் திருப்பித் தாக்கியபோதுதான் இந்த 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதேபோல் கூப்வாரா மாவட்டத்தின் காலரூஸ் பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையின்போது, நேற்றிரவு ஒருதீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். அவனிடமிருந்து சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இதே மாவட்டத்தின் லோலாப் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய மற்றொரு தாக்குதலில் ராணுவத்துக்குத் தகவல்தரும் ஒருவர் கொல்லப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+