போர் விமானம்: இந்தியாவுக்கு அமெரிக்கா உதவி
வாஷிங்டன்:
இந்தியா தயாரித்து வரும் நவீன போர் விமானமான எல்.சி.ஏவுக்குத் தேவையான என்ஜின்களைத் தர அமெரிக்காமுன் வந்துள்ளது.
இதையடுத்து இந்தியா தனது உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை வைத்து இந்த சோதனை விமானத்தைத் தயாரித்தது.வேறு விமானத்தில் இருந்த அமெரிக்காவின் ஜி.ஈ. நிறுவன என்ஜினை எல்.சி.ஏவில் பொறுத்தி சோதனையும்செய்து பார்த்துவிட்டது. இந்தச் சோதனைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
அமெரிக்கா என்ஜின் தராது என முடிவெடுத்த இந்தியா இதற்காக காவேரி எனப்படும் என்ஜின்களைத் தயாரிக்கஆரம்பித்துள்ளது. ஆனால், இந்த என்ஜின் தயாரிப்பு காலதாமதம் ஆகி வருகிறது. இதனால் எல்.சி.ஏ. தயாராவதும்காலதாமதமாகி வருகிறது.
இந் நிலையில் மீண்டும் இந்தியாவுக்கு என்ஜின்களைத் தர அமெரிக்கா முன்வந்துள்ளது. இதனால், எல்.சி.ஏ. மிகவிரைவிலயே தயாரிக்கப்பட்டு விமானப் படையில் சேர்க்கப்பட்டுவிடும்.
அமெரிக்கா சென்றுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசும் அந் நாட்டு பாதுகாப்பு அமைச்சர்டொனால்ட் ரம்ஸ்பீல்டும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அதே போல இரு நாட்டு ராணுவத்தினரும் ரகசிய தகவல்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளவும்முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது மிக முக்கியமான ஒப்பந்தமாகக் கருதப்படுகிறது. இந்தியாவை எப்போதும்சந்தேகப் பார்வையோடு பார்த்து வரும் அமெரிக்கா ரகசிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முன்வந்துள்ளதுஇதுவே முதன்முறையாகும். பென்டகனில் இதற்கான ஒப்பந்தத்தில் பெர்னாண்டஸ் கையெழுத்திட்டார்.
அதே போல நீர்மூழ்கிகளில் பிரச்சனை ஏற்பட்டால் இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளவும்,மலாக்கா பகுதியில் உள்ள அமெரிக்கக் கப்பல்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்புத் தருவது குறித்தும்விவாதிக்கப்பட்டு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
பின்னர் பென்டகனில் நிருபர்களிடம் பேசிய பெர்னாண்டஸ்,
எல்லையில் இப்போது நிலவும் பதற்றத்துக்கு பாகிஸ்தன் தான் முழக்க முழக்க காரணம். பயிற்சிக்காக எல்லைக்குவந்த பாகிஸ்தான் ராணுவம் அங்கேயே முகாமிட்டது. இதனால் தான் எங்கள் படைகளைக் குவித்தோம்.இப்போதும் கூட பாகிஸ்தானின் செயலைப் பொறுத்துத் தான் எங்கள் நடவடிக்கைகள் அமையும் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications