புலிகளுக்கு இந்தியா அனுமதியா? கருணாநிதி-ஜெயுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை
சென்னை:
இலங்கை பிரச்சனை தொடர்பாக புலிகளுக்கும் நார்வே குழுவினரும் இந்தியாவில் தங்கி பேச்சு நடத்தஅனுமதிக்கலாமா என்பது குறித்து பல கட்சித் தலைவர்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தஆரம்பித்துள்ளது. முதல்கட்டமாக தமிழக தலைவர்களுடன் இந்த ஆலோசனையைத் தொடங்கியுள்ளது.
முதலில் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய வசுந்தரா பின்னர் மாலையில் திடீரெனகருணாநிதியையும் சந்தித்துப் பேசினார்.
ஜெயலலிதாவை அவர் சந்தித்துப் பேசியதில் அரசியலும் பேசப்பட்டதாகத் தெரிகிறது. மத்திய அரசுக்குஜெயலலிதா தொடர்ந்து ஆதரவளித்து வருவதை பிரதமரும் மூத்த பா.ஜ.க. தலைவர் அத்வானியும் வரவேற்பதாகக்கூறிய வசுந்தரா தொடர்ந்து ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
பின்னர் தான் முக்கிய விவகாரமான புலிகள் விஷயம் பேசப்பட்டது. இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்தியாதலையிட வேண்டும் என அந் நாட்டு அரசு சார்பிலும், புலிகள் சார்பிலும், நார்வே சார்பிலும் தொடர்ந்துவற்புறுத்தல் வந்து கொண்டிருப்பதால் இது குறித்துப் பரிசீலிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதை வசுந்தராவிளக்கினார்.
இதனால் தமிழகத்தில் ஏற்படும் அரசியல் பாதிப்புகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்தவிவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு அதிமுக ஆதரவு தெரிவிக்க வேண்டும் என வசுந்தரா கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து கருணாநிதியை அவரது கோபாலபுரம் வீட்டில் சென்று சந்தித்த வசுந்தரா, அவருடனும் இந்தவிவகாரம் குறித்துப் பேசினார்.
தான் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவோ எதிராகவோ இல்லை என்பதை விளக்கிய கருணாநிதி, இந்தவிஷயத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவை ஆதரிப்பதாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து மத்திய அரசு காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் பிற முக்கிய கட்சித் தலைவர்களுடன்ஆலோசனை நடத்திவிட்டு ஒரு முடிவெடுக்கும் என்று தெரிகிறது.
முன்னதாக புலிகள் தமிழகத்தில் தங்கி பேச்சு நடத்த அதிமுக, காங்கிரஸ், த.மா.கா ஆகியவை எதிர்ப்புத்தெரிவித்திருந்தன. திமுக, மதிமுக ஆகியவை மத்திய அரசின் முடிவை ஏற்பதாதக் கூறியுள்ளன.
இந் நிலையில் வசுந்தராவின் ஆலோசனைகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications