கிரிக்கெட்: இங்கிலாந்து வெற்றி
கட்டாக்:
கட்டாக்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்தியாவுக்கு எதிராக நடந்த 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 16ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றியைப் பெற்றது.
கடந்த சனிக்கிழமை நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற தெம்புடன் இந்திய அணியினர் இன்றுடாஸ் வென்றனர். ஆனால் இங்கிலாந்தையே முதலில் மட்டை பிடிக்க அழைத்தனர்.
களமிறங்கிய இங்கிலாந்து அணி 6வது ஓவரிலேயே முதல் விக்கெட்டைப் பறிகொடுத்தது. 11வது ஓவரில் அடுத்தவிக்கெட்டையும் இழந்தது.
ஆனால் இதற்குப் பிறகு வந்த இங்கிலாந்து அணியினர், நின்று நிதானமாக ஸ்கோரை உயர்த்தினர்.
மொத்தமுள்ள 50 ஓவர்களையும் ஆடித் தீர்த்த இங்கிலாந்து, 7 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்களைக் குவித்தது.
காலிங்வுட் அதிகபட்சமாக 71 ரன்கள் (78 பந்துகளில்) எடுத்திருந்தார். அடுத்தபடியாக வாகன் 80 பந்துகளில் 63ரன்களைக் குவித்தார்.
இந்திய அணியின் ஜவகல் ஸ்ரீநாத், அகர்கர், அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர்ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைச் சாய்த்தனர்.
பின்னர் களமிறங்கிய இந்தியாவின் கேப்டன் கங்குலி 4வது ஓவரிலேயே 14 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன்திரும்பினார்.
அவருடன் இருந்த இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான டெண்டுல்கரும், அடுத்து வந்த தினேஷ் மோங்கியாவும்பொறுமையாக ஆடி, இந்தியாவின் ஸ்கோரை 99க்கு உயர்த்தினர்.
இந்நிலையில் டெண்டுல்கர் (60 பந்துகளில் 45 ரன்கள்) ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்த சிறிதுநேரத்திலேயே வி.வி.எஸ். லக்ஷ்மணும் ரன் அவுட் ஆனார்.
மோங்கியாவும் (82 பந்துகளில் 48 ரன்கள்) ரன் அவுட்டுக்குத் தப்பவில்லை. இவர்தான் இந்திய அணியிலேயேஅதிக ரன்களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து வந்த அனைத்து இந்திய அணியினரும் "போன மச்சான் திரும்பி வந்தான்"-கிற மாதிரி அடுத்தடுத்து அவுட்ஆனார்கள்.
இந்தியா வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கில் அகர்கர் மட்டும் ஆடிக் கொண்டிருந்தார். ஆனால் 29ரன்கள் (26 பந்துகளில்) எடுத்த நிலையில் அவரும் அவுட் ஆனதையடுத்து, 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாதோல்வியடைந்தது.
ஸ்ரீநாத் மட்டும் 7 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசியாகக் களத்தில் நின்று கொண்டிருந்தார்.
இங்கிலாந்தில் அதிக ரன்களை எடுத்த காலிங்வுட்டுக்கு "மேன் ஆப் த மேட்ச்" விருது கிடைத்தது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications