கொல்கத்தா தாக்குதல்: 3 மதப்பள்ளி ஆசிரியர்கள் உள்பட 8 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா:

கொல்கத்தா அமெரிக்க மையத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக 5 வங்கதேசத்தினரும் 3 இஸ்லாமிய மதப் பள்ளிஆசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 53 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களில் முன்பு குஜராத் போலீசாரால்சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி ஆசிப் ரசாக்கின் சகோதரர்கள் இருவரும் அடங்குவர்.

அமெரிக்க மையத்தின் வாசலில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் தீவிரவாதிகள் தாக்குதல் முழுவதுமாகபதிவாகியுள்ளது. தீவிரவாதிகளின் முகங்கள், மோட்டார் சைக்களின் எண்கள் கூட பதிவாகியிருப்பதாகத்தெரிகிறது.

இதை வைத்து விசாரணை நடத்திய போலீசார் இந்திய-வங்கதேச எல்லையில் ஹதியான்பூர் கிராமத்தில் உள்ளமதரஸாவில் (மதப் பள்ளி) பணியாற்றும் 3 ஆசிரியர்களைக் கைது செய்தனர். இவர்கள் மூவரும் இந்தியர்கள்.இதில் குர்பான் அலி என்ற ஆசிரியரின் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

இவர்கள் தவிர வங்கதேசத்தைச் சேர்ந்த 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இந்திய-வங்கதேசஎல்லையில் உள்ள பஷீர்காட், சசின்பூர் கிராமங்களில் வசித்து வருபவர்கள்.

தாக்குதல் நடத்துவதற்கு முன் துபாயில் சிலருடன் இந்தக் கும்பல் தொலைபேசியில் பேசியுள்ளது.

கொல்கத்தா தொழிலதிபரைக் கடத்தியதால் கைது செய்யப்பட் ஆசிப் ரசாக் என்ற ஐ.எஸ்.ஐ. தீவிரவாதி தப்பிச்செல்ல முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டான்.

இவன் ஐ.எஸ்.ஐக்கு இந்திய ரகசிய தகவல்களை விற்றதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்து.

இவன் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கவே போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.இதற்குத் தேவையான துப்பாக்கிகள் ஐ.எஸ்.ஐ. மூலமாக இந்தத் தீவிரவாதிகளுக்குத் தரப்பட்டுள்ளன. இத்தாக்குதலுக்கான திட்டம் துபாயில் வகுக்கப்பட்டுள்ளது என மேற்கு வங்கத் தலைமைச் செயலாளர் கூறினார்.

கைது செய்யப்பட்ட 8 பேர் தவிர மேலும் 53 பேரிடம் விசாரணையும் நடந்து வருகிறது என்றார். விரைவில் இந்தத்தாக்குதல் குறித்த முழு விவரங்களும் வெளியாகி குற்றவாளிகள் பிடிபடுவர் என்றார்.

இதற்கிடையே குற்றவாளிகள் வங்கதேசத்துக்குள் தப்பிச் சென்றுவிடாமல் தடுக்க எல்லையில் கண்காணிப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐயும் விசாரணை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல் தங்களுக்குஎதிரான தாக்குதல் அல்ல என அமெரிக்கா ஏற்கனவே கூறிவிட்டது. இருப்பினும் விசாரணைகளில் இந்தியாவுக்குஉதவி வருகிறது.

இதற்கிடையே இத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ஹர்கத்-உல்-ஜிகாத்-இஸ்லாமிஅமைப்பின் தலைவன் மறுப்பு தெரிவித்துள்ளான். வங்கதேசத்தில் இருந்து கொண்டு செயல்பட்டு வரும் இந்தஅமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் தான் கொல்க்ததா தாக்குதலை நடத்தியதாக போலீசார் கருதுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+