சென்னை கிரிக்கெட்: மோசடி பண வசூலில் இறங்கிய அதிமுகவினர்
சென்னை:
சென்னையில் கிரிக்கெட் போட்டியை ரசிக்க வந்த ரசிகர்களின் வாகனங்களுக்கு போலி ரசீதுகள் வழங்கி,அதிமுகவினர் ஒரே நாளில் லட்சக்கணக்கில் சம்பாதித்தனர்.
நேற்று நடந்த இந்தியா-இங்கிலாந்து அணிகளின் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள்சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கூடினர். ரசிகர்கள் வந்த வாகனங்கள் மைதானத்தைச் சுற்றிலும்நிறுத்தப்பட்டிருந்தன.
வாகன நிறுத்தத்திற்கான கட்டணம் வசூலிக்க சென்னை மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.மாநகராட்சியின் இந்த அலட்சியத்தை அதிமுக பிரமுகர்கள், கவுன்சிலர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களுக்குசாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
அதிமுக கரைவேட்டிகளுடன் இந்தக் கும்பல் ஆயிரக்கணக்கில் அவசர போலி வாகன ரசீதுகளை அச்சடித்துவைத்துக் கொண்டு டூவீலருக்கு 5 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.10 ரூபாயும் வசூலித்தது.
இந்தக் கும்பல் வழங்கிய ரசீதில் கட்டணத் தொகையும், எல்.ஜி., கப், இந்தியா-இங்கிலாந்து, சேப்பாக்கம், சென்னைஎன்றும் அச்சடிக்கப்பட்டிருந்தது. வேறு எந்த தகவலும் இல்லை.
இவர்களுக்கு யார் இந்த உரிமை தந்தார்கள் என்றும் தெரியவில்லை. இவர்களை தட்டிக் கேட்டவர்களுக்கு திட்டுவிழுந்தது.
இவர்கள் கொடுத்த ரசீதில் வாகனங்கள் காணாமல் போனால் இவர்கள் பொறுப்பேற்பார்களா என்ற விவரமும்இல்லை.
நேற்று மட்டும் 5,000க்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்களும், நூற்றுக் கணக்கான கார்களும் மைதானத்தைச்சுற்றி நிறுத்தப்பட்டன. இதன் மூலம் ஒரே நாளில் பல லட்சம் லாபம் பார்த்துவிட்டனர் ஆளும்கட்சியினர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications