ஆண்டிப்பட்டி: திமுகவுக்கு ஆதரவு- அதிமுகவுக்கு எதிர்ப்பில்லை: பா.ஜ.கவின் நவீன அரசியல்
ஆண்டிப்பட்டி:
ஜெயலலிதா மனுத் தாக்கல் செய்ததையடுத்து ஆண்டிப்பட்டி தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.
அதிமுகவினர் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர். தேர்தலை எதிர்த்து வழக்குத் தாக்கல்செய்திருந்தாலும் திமுகவினர் பிரச்சாரத்தில் எந்தக் குறையும் வைக்கவில்லை. அவர்களும் முழு அளவில்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக வேட்பாளர் வைகை சேகருக்கு ஆதரவாக திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி தனதுஆதரவாளர்களுடன் வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இங்கு மொத்தம் 33 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதில் சுயேச்சைகளின் வேட்பு மனுக்கள் தள்ளுபடிசெய்யப்பட்டுவிட்டன. மீதமுள்ள 30 பேரில் ஒருவர் ஜெயலலிதாவுக்கு மாற்று வேட்பாளராக அதிமுக சார்பில்மனுத் தாக்கல் செய்த தங்கத்தமிழ்ச் செல்வன். எனவே, இப்போது இப்போது களத்தில் 29 பேர் உள்ளனர்.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற நாளை மறுநாள் தான கடைசி நாள். அன்றைய தினம் தங்கத்தமிழ்ச் செல்வன்தனது மனுவை வாபஸ் பெற்றுவிடுவார். மேலும் பலரும் அதிமுகவினரால் வாபஸ் வாங்க வைக்கப்படுவார்கள்என்று தெரிகிறது.
பா.ஜ.க. டபுள் கேம்:
இந் நிலையில் ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவை எதிர்த்து பிரச்சாரம் செய்ய மாட்டோம் என பா.ஜ.க.அறிவித்துள்ளது.
அதிமுகவை தாக்கி பிரச்சாரம் செய்ய மாட்டோம் என்று தமிழக பாஜக தலைவர் கிருபாநிதி கூறியுள்ளார்.திருவண்ணாமலையில் டாக்டர் கிருபாநிதி நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியில் உள்ள திமுகவுக்கு ஆதரவாக பாஜகவினர் ஆண்டிப்பட்டியில் முகாமிட்டுபிரச்சாரம் செய்வோம்.
அதே சமயம் ஆண்டிப்பட்டியில் போட்டியிடும் அதிமுக, மதிமுகவைத் தாக்கி பிரச்சாரம் செய்ய மாட்டோம்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் காங்கிரஸ், தமாகா, கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடவில்லை எனக் கூறிதங்களுடைய ஜனநாயகக் கடமையை செய்ய தவறி விட்டார்கள். ஏன் அப்படி செய்தார்கள் என்று புரியவில்லை.
ஆனால் அவர்களுடைய கட்சிக்காரர்கள் யாருக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறவில்லை.அதுவும் ஜனநாயகக் கடமையில் இருந்து தவறியதாகும். எனவே அவர்களாகவே யாருக்கு வாக்கு அளித்தால்நல்லது என்று முடிவு செய்து வாக்களிக்க வேண்டும்
பாஜக கட்சியுடன் அதிமுக கூட்டணி வைத்துக் கொள்ளும் என்ற கூறப்படுவது சரியானது அல்ல. அது குறித்துநாங்களோ, அதிமுகவோ எந்தவித பேச்சும் நடத்தவில்லை என்று கிருபாநிதி கூறினார்.
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications