காவிரிப் பிரச்சனை: உச்ச நீதிமன்றத்தை 10 ஆண்டுகளாக ஏமாற்றி வரும் கர்நாடகம்
டெல்லி:
காவிரி நதி நீர் பங்கீடு வழக்கில் இரண்டு வாரத்துக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி கர்நாடக அரசுக்குஉச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக தமிழக, கர்நாடக உயர் நீதிமன்றங்களில் நடந்து வந்த வழக்குகள் 10ஆண்டுகளுக்கு முன்பே உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுவிட்டது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்குவிசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு கர்நாடக அரசுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், இதை கர்நாடகம் கண்டுகொள்ளவே இல்லை.
இந் நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்யாமல் கர்நாடகம் 10 ஆண்டுகளாக காலதாமதம் செய்து வருவதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம்தெரிவித்தனர்.
இரண்டு வாரத்துக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர். இதுதொடர்பாக நோட்டீசும் அனுப்ப உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த கண்டனத்தையடுத்து கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா அவசர அவசரமாகநேற்றிரவு பெங்களூரில் தனது அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார். இக் கூட்டத்தில் நீதிமன்றம் அனுப்பியநோட்டீசுக்கு பதில் அளிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications