ஆண்டிப்பட்டி முறைகேடுகள்: தேர்தல் கமிஷன் ரகசிய விசாரணை
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்தது குறித்து தேர்தல் கமிஷன் மீண்டும் ரகசியமாய்விசாரணை நடத்தியுள்ளது.
இடைத் தேர்தல் நடக்கவுள்ள இந்தத் தொகுதியில் அதிமுகவினர் ஆயிரக்கணக்கான போலி வாக்காளர்களைசேர்த்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மற்ற இரு தொகுதிகளில் இதே குற்றச்சாட்டு காரணமாக தேர்தல்நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால், ஆண்டிப்பட்டியில் மட்டும் தேர்தல் நடக்கும் என தேர்தல் கமிஷன்அறிவித்துவிட்டது.
அதே நேரத்தில் அங்கு முறைகேடுகள் நடந்துள்ளதை தேர்தல் கமிஷனே ஒப்புக் கொண்டுள்ளது.
ஜெயலலிதா போட்டியிடுவதால் தான் தேர்தல் கமிஷன் முறைகேடுகளையும் மீறி தேர்தல் நடத்துவஞூ இவ்வாறுநடந்துகொள்வதாக பரவலாக புகார் எழுந்துள்ளது.
இந்தத் தேர்தலை நிறுத்தக் கோரி திமுக தலைவர் கருணாநிதி ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதினார். இப்போது இத்தேர்தலை நிறுத்தக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் வைகை சேகர் வழக்கு தாக்கல்செய்துள்ளார்.
இந்த வழக்குக்கு நீதிமன்றத்தில் உரிய பதில் அளிக்கும் வகையில் ஆண்டிப்பட்டி வாக்காளர் பட்டியல் முறைகேடுகுறித்து தேர்தல் கமிஷன் மீண்டும் விசாரணை நடத்தியது.
ஆண்டிப்பட்டியில் முகாமிட்டுள்ள மத்திய தேர்தல் பார்வையாளர் ஆனந்த் பிரகாஷ், பெரியகுளம் துணைகலெக்டர் விஜயராஜ்குமார் மற்றும் பல அதிகாரிகள் ஆண்டிப்பட்டியில் அடங்கியுள்ள பல்வேறு கிராமங்களுக்கும்சென்று பல வீடுகளில் வாக்காளர் பட்டியலை சரி பார்த்தனர்.
இந்த விவரங்களை சேகரித்துக் கொண்டு அதிகாரிகள் உடனடிாக டெல்லி விரைந்தனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications