குடியரசு தின விழாவை புறக்கணித்த ஸ்டாலின்: "கராத்தே" ஆவேசம்
சென்னை:
சென்னை மாநகராட்சி மேயர் ஸ்டாலின் குடியரசு தின விழாவைப் புறக்கணித்தது தேச விரோத செயல் என்றுதுணை மேயரான "கராத்தே" தியாகராஜன் கூறினார்.
இது தொடர்பாக தியாகராஜன் நேற்று (திங்கட்கிழமை) நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
மாநகராட்சி ஆணையரின் அனுமதியோடு மாநகராட்சி கொடி, முத்திரையுடன் காரில் நான் செல்வதை மரபு மீறல்என்று ஸ்டாலின் கூறுகிறார்.
மேலும், அவருக்கு மாநகராட்சியால் கொடுக்கப்பட்ட 2 கார்களைப் பயன்படுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளதாகக்கூறியுள்ளார். ஆனால், அந்த கார்கள் அவரது வீட்டுக்கு காய்கறிகள் வாங்க பயன்படுகிறது என்பதை அப்பகுதிமக்கள் நன்கு அறிவார்கள்.
கடந்த 26ம் தேதி சென்னை கடற்கரை சாலையில் நடந்த குடியரசு தின விழாவுக்கு வருகை தந்த முதல்வர் மற்றும்கவர்னரை மேயர் தான் முறைப்படி வரவேற்றிருக்க வேண்டும்.
ஆனால், அந்த விழாவையே புறக்கணித்த ஸ்டாலினுக்கு மரபுகளைப் பற்றி பேச யோக்யதை கிடையாது. அவரதுதந்தையான கருணாநிதி முதல்வராக இருந்தபோது குடியரசு விழாவை இவர் புறக்கணித்தது உண்டா? எதிர்க்கட்சிஆட்சியில் இருந்தால் விழாவை புறக்கணிப்பதுதான் மரபா?
ஆனாலும் அதே நாளில் சென்னை மாநகராட்சியில் மேயர் ஸ்டாலின் கொடியேற்றிய போது நான் மற்றும் அதிமுககவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டு மேயருக்கு உரிய மரியாதையை அளித்தோம் என்று தியாகராஜன்கூறினார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications