பாக். குற்றவாளிகள் பட்டியலில் அத்வானி பெயர்?
இஸ்லாமாபாத், டெல்லி:
பாகிஸ்தானின் குற்றவாளிகள் பட்டியலில் உள்துறை அமைச்சர் அத்வானியின் பெயர் இடம் பெற்றுள்ளதாகஅந்நாட்டு பத்திரிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
ஜின்னா கொலை முயற்சி வழக்கில் 18 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டதாகவும் அவர்களில் 6 பேரைப் பாகிஸ்தான்போலீசார் கைது செய்து விட்டதாகவும் அப்பத்திரிக்கை கூறியுள்ளது.
மீதமுள்ள 12 பேரில் அத்வானியும் சில விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்களும் அடக்கம் என்றும் அவர்கள்போலீசாரின் பிடியிலிருந்து தப்பி விட்டதாகவும் அச்செய்தி தெரிவித்துள்ளது.
ஆனால் 1960களில் ஏதோ ஒரு ஆண்டில்தான் விஸ்வ ஹிந்து பரிஷத் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு முட்டாள் தனமான குற்றச்சாட்டு என்று இந்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
கடந்த 1979ம் ஆண்டு தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்தபோது அத்வானி பாகிஸ்தான் போய்வந்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு ஆக்ரா உச்சி மாநாடு நடப்பதற்கு முன்னரும் அங்கு போய் அந்நாட்டு அதிபர்பர்வேஸ் முஷாரப்பைச் சந்தித்துவிட்டு வந்துள்ளார் அத்வானி.
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகள் கடந்து இந்தக் குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது. அப்போதெல்லாம் வராதகுற்றச்சாட்டு இப்போது மட்டும் எப்படி எழுந்துள்ளது என்று உள்துறை அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆனால் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுபற்றி இதுவரை வாயே திறக்கவில்லை.
20 தீவிரவாதிகளை ஒப்படைக்க வேண்டும் என்று கோரி பாகிஸ்தானிடம் இந்தியா அளித்துள்ள பட்டியலுக்குப்பதிலடியாக நாங்களும் இந்தியத் தீவிரவாதிகள் பட்டியலை வைத்துள்ளோம், அவர்களை இந்தியா எங்களிடம்ஒப்படைக்க வேண்டும் என்று சமீபத்தில்தான் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சத்தார்கூறியிருந்தார்.
அந்தப் பட்டியலை உடனடியாக பேக்ஸ் செய்யும்படி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கேட்டுக்கொண்டார். ஆனால் இதுவரை பாகிஸ்தானிடமிருந்து அதுபற்றி மூச்சே இல்லை.
சிவசேனா தலைவர் பால் தாக்கரேயையும் தங்களிடம் இந்தியா ஒப்படைக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான்அடிக்கடி கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications