கிரிக்கெட் மோசடி: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
டிக்கெட் இருந்தும் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க அனுமதிக்கப்படாத ரசிகர்களுக்கு கட்டணத்தைத் திருப்பித்தரவேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 25ம் தேதி இந்தியா-இங்கிலாந்துக்கிடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம்ஸ்டேடியத்தில் நடந்தது. போட்டி தொடங்குவதற்கு முன்பே இடமில்லாமல் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது.
இந்நிலையில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் போட்டியைப் பார்க்க டிக்கெட் இருந்தும் ஸ்டேடியத்துக்குள்அனுமதிக்கப்படவில்லை.
இந்தச் சம்பவம் குறித்து வக்கீல் சந்திரசேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்தமனுவில் அவர் கூறியிருப்பதாவது:
அளவுக்கதிகமாக கள்ளத்தனமாக டிக்கெட் விற்பனை செய்ததால்தான், உண்மையாக பணம் கொடுத்து டிக்கெட்வாங்கியவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை.
அதனால் டிக்கெட் வைத்திருந்தும் போட்டியை பார்க்க அனுமதிக்கப்படாத ரசிகர்களுக்கு பணத்தை திருப்பித்தரவேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
இன்று (புதன்கிழமை) சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன்ரெட்டி மற்றும் நீதிபதி சுப்புலட்சுமிஆகியோர் முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு இன்னும் 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறுகேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications