கருணாநிதி கைது விவகாரம்: ராமன் கமிஷனை ரத்து செய்யக் கோரும் வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்துநியமிக்கப்பட்டுள்ள ராமன் கமிஷனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.

தேசிய மனித உரிமைப் பேரவை தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆண்டு ஜூன் 29ம் தேதி நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டார். மேலும் அப்போது 2 மத்தியஅமைச்சர்களும் தரக்குறைவாக போலீசாரால் நடத்தப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் மனித உரிமை மீறல் நடந்துள்ளது. இதுபற்றி மனித உரிமைக் கமிஷனுக்குப் புகார்அனுப்பியுள்னோம். தேசிய மனித உரிமைக் கமிஷனும் எங்கள் புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

கருணாநிதி கைது விவகாரம் தொடர்பாக அதே நாள் தமிழக அரசு நீதிபதி ராமன் கமிஷனை நியமித்தது. இந்தநியமனம் குறித்து அப்போதே மனித உரிமைக் கமிஷன் தலைவரான வர்மா கேள்வி எழுப்பினார்.

பின்னர் தேசிய மனித உரிமைக் கமிஷன் தன்னுடைய ஆரம்பக் கட்ட விசாரணையைத் துவங்கும்போது, அதைஎதிர்த்து தமிழக அரசு சென்னை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கு இன்னும் நிலுவையில்உள்ளது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, பல்வேறு கட்டங்களில அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். மனிதஉரிமை மீறல் நடக்கவில்லை என்றும் போலீசார் நடந்து கொண்ட முறையை நியாயப்படுத்தியும் அறிக்கைவெளியிட்டுக் கொண்டிருந்தார்.

தேசிய மனித உரிமைக் கமிஷனின் விசாரணையைத் தடுப்பதுதான் தமிழக அரசின் ஒரே நோக்கமாக இருந்துவருகிறது.

தேசிய மனித உரிமைக் கமிஷன் இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளபோது, தமிழக அரசும் இதற்கென்றுதனியாக விசாரணைக் கமிஷன் அமைப்பதற்கு அதிகாரமில்லை.

எனவே தமிழக அரசு நியமித்த நீதிபதி ராமன் தலைமையிலான ஒருநபர் கமிஷனை ரத்து செய்ய வேண்டும். இந்தவழக்கு முடியும் வரை நீதிபதி ராமன் கமிஷன் செயல்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றுஅம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி ஏ. சுப்புலட்சுமி,இந்த விசாரணைக் கமிஷனை ஏன் நிறுத்தக் கூடாது என்று கேட்டார்.

இது தொடர்பாக இன்னும் 8 சாட்சிகள் விசாரிக்கப்பட உள்ளனர் என்று அரசு வழக்கறிஞர் என்.ஆர். சந்திரன்கூறவே, இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் இதுகுறித்து தமிழக அரசு அடுத்த ஒரு வாரத்திற்குள் விளக்கமளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள்உத்தரவிட்டனர்.

அதுவரை தன் விசாரணையை நீதிபதி ராமன் கமிஷன் மிக மெதுவாகவே நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள்கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+