என்னை கொல்ல முயன்றார்: ராஜகோபால் மீது மகன் புகார்
சென்னை:
ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபால் தன்னைக் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக அவரது மகன்சிவகுமார் நீதிமன்றத்தில் 3 மணி நேரம் ரகசிய வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
ஜீவஜோதி என்ற பெண்ணைக் கட்டாயப்படுத்திக் கல்யாணம் செய்ய முயன்றது மற்றும் அவரது கணவர் கொலைவழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள ராஜகோபால், தற்போது மருத்துவமனையில் போலீஸின் பாதுகாப்பில்சிகிச்சை பெற்று வருகிறார்.
ராஜகோபாலுக்கு வள்ளியம்மை என்ற மனைவியும் சிவகுமார், சரவணன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.தனது ஹோட்டலில் வேலை செய்த கிருத்திகாவை 2வது தாரமாக ராஜகோபால் மணந்துக் கொண்டார்.
சிவகுமார் ஹோட்டல் நிர்வாகப் பொறுப்பையும், சரவணன் ஐஸ்க்ரீம் வியாபாரத்தையும் கவனிக்கின்றனர்.ராஜகோபாலுக்கும் அவரது மகன்களுக்கும் கருத்து வேறுபாடு முற்றிய நிலையில் சிவகுமார் சைதாப்பேட்டைபோலீஸ் ஸ்டேஷனில் தந்தை மீது புகார் கொடுத்தார்.
இந்நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார் சிவகுமார்.வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது:
சமீபத்தில் என் தந்தையைப் பார்க்க மருத்துவனைக்கு சென்றேன். சிங்கப்பூரில் உள்ள ஹோட்டல் தொழில்உன்னால் நஷ்டம் அடைந்து விட்டது என்று கூறி அவர் என்னைத் திட்டினார்.
பிறகு திடீரென்று என்னைப் பிடித்துத் தள்ளி வெளியே போகும்படி அடித்தார். அதன் பிறகு எனக்கு கொலைமிரட்டல்கள் வரத் தொடங்கின.
சாந்தகுமார் சென்ற இடத்துக்கு நீயும் சென்று விடுவாய் என்று என் தந்தையே மிரட்டினார் என்று சிவகுமார் தன்வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இந்நிலையில் சிவகுமார் மீதே போலீசார் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வடபழனி கிளை ஹோட்டலின் மேலாளர் நாதன், சமீபத்தில் சிவகுமாரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போதுநாதனை சிவகுமார் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து நாதன் கொடுத்த புகாரின் பேரில் சிவகுமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications