கடலூர், நாகை, புதுவையில் விரைவில் கடலோர காவற்படை மையங்கள்
சென்னை:
கடலூர், நாகப்பட்டினம் மற்றும் பாண்டிச்சேரி உள்பட 10 இடங்களில் விரைவில் கடலோர காவற்படை மையங்கள்செயல்படத் தொடங்கும் என்று கிழக்கு கடலோர காவற்படை தளபதியான கமோதர் ஆர்.எஸ். வாசன் கூறினார்.
கடலோர காவற்படை இன்று (வெள்ளிக்கிழமை) தன்னுடைய வெள்ளி விழாவைக் கொண்டாடிக்கொண்டிருப்பதையொட்டி, சென்னையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் கமோதர் வாசன் பேசியதாவது:
தமிழகத்தின் கடலூர், நாகப்பட்டினம், பாண்டிச்சேரி உள்பட 10 இடங்களில் கடலோர காவற்படையின் மையங்கள்விரைவில் செயல்படத் தொடங்கும்.
மேலும் கடத்தல் வேட்டைகளிலும் கடலோர காவற்படை சிறப்பாகப் பணியாற்றியுள்ளது. இதுவரை 99 கடத்தல்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 621 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.261.7 கோடி மதிப்புள்ளபொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சென்னையில் கடலோர காவற்படையைச் சேர்ந்த மேலும் சில கப்பல்கள் விரைவில் பணியைத் தொடங்கவுள்ளனஎன்றார் வாசன்.
முன்னதாக கடலோர காவற்படையின் வெள்ளி விழாவை முன்னிட்டு சிறப்புத் தபால் தலை வெளியிடப்பட்டது.வட தமிழக போஸ்ட் மாஸ்டர் ஜெனரலான கே. நூர்ஜகான் இந்தச் சிறப்புத் தபால் தலையை வெளியிட, அதைவாசன் பெற்றுக் கொண்டார்.
கடலோர காவற்படையின் வெள்ளி விழாவை முன்னிட்டு இதன் 4 கப்பல்களைப் பொதுமக்கள் பார்வையிடஅனுமதியளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு பொதுமக்கள் இந்தக் கப்பல்களை இலவசமாகப்பார்வையிடலாம்
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications