கோவை குண்டு வெடிப்பு வழக்கு: 2 அல்-உம்மா கைதிகளுக்கு பரோல்
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளஅல்-உம்மா அமைப்பைச் சேர்ந்த 2 கைதிகள் பரோலில் செல்வதற்கு கோயம்புத்தூர் நீதிமன்றம் அனுமதிவழங்கியது.
கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு தொடர்பாக ஊம் பாபு, அப்துல் நாசர் ஆகிய 2 பேரும் தற்போது சிறையில்உள்ளனர்.
இவர்கள் 2 பேரும் சொந்த விஷயம் காரணமாக பரோலில் செல்ல அனுமதி அளிக்குமாறு 5வது ஜூடிசியல்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர்.
இதைப் பரிசீலித்த நீதிபதி பரோலில் செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கினார்.
இதையடுத்து அந்த 2 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர்களது வீடுகளுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
பின்னர் அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications