கருணாநிதியின் எம்.எல்.ஏ. பதவியைப் பறிக்க அதிமுக திட்டம்
சென்னை:
அடுத்த மாதம் நடக்கவுள்ள சட்டசபைக் கூட்டத்தொடரில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொள்ளாவிட்டால்அவரது எம்.எல்.ஏ. பதவியைப் பறிக்க அதிமுக முயலும் என்று தெரிகிறது.
அதிமுக ஆட்சிக்கு வந்தபின்னர் இதுவரை தமிழக சட்டசபை 2 முறை கூடியுள்ளது. ஆனால், இந்த இரு கூட்டத்தொடர்களிலும் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை.
3 கூட்டத் தொடர்களில் எந்த உறுப்பினராவது தொடர்ந்து கலந்து கொள்ளாமல் இருந்தால் அவரது எம்.எல்.ஏ.பதவியை சபாநாயகரால் பறிக்க முடியும்.
இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி கருணாநிதியின் எம்.எல்.ஏ. பதவியைப் பறிக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாகக்கூறப்படுகிறது.
அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கருணாநிதி சட்டசபைக்குள்ளேயே நுழையவில்லை. சபாநாயகர் காளிமுத்துவின்அறையில் வைத்துத் தான் தனது எம்.எல்.ஏ. பதவியைக் கூட ஏற்றுக்கொண்டார். எதிர்க் கட்சித் தலைவராகஅன்பழகனைத் தான் நியமித்தார் கருணாநிதி.
இந நிலையில் வரும் மார்ச் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர்கூடுகிறது.
பிப்ரவரி 21ம் தேதி ஆண்டிப்பட்டி தேர்தல் முடிந்த கையோடு ஜெயலலிதா மீண்டும் முதல்வராகி இந்தக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வார் என்று அதிமுக கருதுகிறது. இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் சட்டமன்றக்கூட்டத் தொடர் மார்ச் 13ம் தேதிக்குள் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா பதவி இழந்த பின்னர் சட்டசபைக் கூட்டமே நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஜெயலலிதா முதல்வராக அமரும் பட்சத்தில் சட்டசபைக்கு கருணாநிதி வருவாரா என்பது சந்தேகம் தான்.எனவே, சட்டசபையின் மூன்று கூட்டத் தொடர்களிலும் அவை நடவடிக்கைளில் கலந்து கொள்ளவில்லை என்றுகூறி கருணாநிதியின் பதவியைப் பறிக்க முடியும்.
இது கருணாநிதிக்கும் தெரியும். ஆனால், அவர் இதைப்பற்றிக் கவலைப்படவில்லை என்று தெரிகிறது. பதவியைநான் ராஜினாமா செய்ய மாட்டேன். பறித்தால் பறித்துக் கொண்டு போகட்டும் என அவர் தனது சகாக்களிடம்கூறிவிட்டதாகத் தெரிகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications