அக்னி ஏவுகணையின் தாக்குதல் தூரம் அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
அக்னி ஏவுகணையின் தாக்குதல் தூரத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சரின்ராணுவ ஆலோசகர் டாக்டர் வி.கே. ஆத்ரே கூறினார்.
வெகு விரைவில் இதன் தாக்குதல் தூரத்தை அதிகப்படுத்தி பரிசோதிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஆத்ரே நேற்றுபெங்களூரில் நடந்த விமானப்படை பொன் விழா நிகழ்ச்சியில் கூறினார்.
அக்னியின் எடையைக் குறைத்து அதன் தூரத்தை அதிகரிப்பதற்கான அனைத்து திட்டங்களும் தயாராக உள்ளனஎன்று கூறிய ஆத்ரே, எவ்வளவு தூரம் அதிகரிக்கப்படும் என்று கூற மறுத்துவிட்டார்.
விரைவில் ரஷ்யாவுடன் இணைந்து "பிரம்மாஸ்" என்ற ஏவுகணையையும் இந்தியா தயாரிக்கவுள்ளது என்றும்ஆத்ரே கூறினார்.












Click it and Unblock the Notifications