பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மீண்டும் நெருக்கடி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

தீவிரவாதிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் முன் வர வேண்டும் என்றுஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பவல் மீண்டும் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் நேற்று வெளியுறவு கமிட்டியில் கலந்து கொண்டு காலின் பவல் பேசியதாவது:

இந்தியாவுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் மீது தகுந்த நடவடிக்கையைமுஷாரப் எடுக்க வேண்டும்.

மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தூண்டுபவர்கள் மீதும் முஷாரப் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஜனவரி 12 ம் தேதி தீவிரவாதத்தை முறியடிப்பதாகத் தான் கூறியதை முஷரப் செயலில் காட்ட வேண்டும்.

இந்திய-பாகிஸ்தான் எல்லைகளில் கடுமையான பதற்றம் நிலவுகிறது. அங்குள்ள படைகளை விலக்கிக்கொள்ளுமாறு அமெரிக்கா இரு நாடுகளையும் தொடர்ந்து வலியுறுத்தும் என்றார் பவல்.

இதற்கிடையே எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிக்குச் சென்ற முஷாரப், அங்கு குவிக்கப்பட்டுள்ளதன்னுடைய படை வீரர்களை நேரில் சந்தித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+