மதுரை மாநகராட்சி ஊழியர்கள் ஸ்டிரைக்: பணிகள் பாதிப்பு
மதுரை:
மதுரை மாநகராட்சி ஊழியர்கள் இன்று (வியாழக்கிழமை) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், துப்புரவுப் பணிகள்உள்பட மாநகராட்சியின் அனைத்துப் பணிகளும் பாதிக்கப்பட்டன.
விடுப்பு பயணச் சலுகை, பண்டிகை போனஸ் உள்பட 33 கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மதுரை மாநகராட்சிஊழியர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
16 சங்கங்களைச் சேர்ந்த சுமார் 3,000 மாநகராட்சி ஊழியர்கள் இன்று மதுரை மாநகராட்சி முன்பாகத் திரண்டுதர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஒரு ஊழியரிடம் கேட்டபோது, "எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பல முறை கேட்டுப்பார்த்து விட்டோம். தர்றோம். அரசுக்கு எழுதியிருக்கோம்" என்று மாநகராட்சி நிர்வாகத்தினர் கூறிவிட்டதாக அவர்தெரிவித்தார்.
எனவே இதுகுறித்து உடனடியாக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால், நாங்கள் காலவரையற்றவேலைநிறுத்ததைத் தொடருவோம் என்றும் அந்த ஊழியர் கூறினார்.
மாநகராட்சி ஊழியர்களின் இந்த வேலைநிறுத்தத்தால் மதுரை முழுவதும் துப்புரவுப் பணிகள் உள்பட அனைத்துப்பணிகளும் பாதிக்கப்பட்டன.
ஏற்கனவே கடந்த 4ம் தேதி தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இவ்வூழியர்கள் மதுரையில் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications