ஆண்டிப்பட்டி தேர்தலை ஒத்திவைக்க கோரிய வழக்கு தள்ளுபடி
சென்னை:
ஆண்டிப்பட்டியில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்டமனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) தள்ளுபடி செய்தது.
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலை எதிர்த்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த செல்வம் என்பவர்உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் முறைகேடு நடந்துள்ளது என்றும் இந்த முறைகேடுசரிசெய்யப்படும் வரை அங்கு தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் செல்வம் அந்த மனுவில் கோரியிருந்தார்.
இம்மனுவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி சுப்புலட்சுமி ஆகியோர்அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளில் தலையிட முடியாது என்று கூறியநீதிபதிகள், செல்வத்தின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications