புவனகிரி அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து 6 பேர் பலி
புவனகிரி:
புவனகிரி அருகே நேற்று (புதன்கிழமை) மாலை டேங்கர் லாரி கவிழ்ந்து பஸ்சுக்காகக் காத்திருந்த மக்கள்கூட்டத்தில் பாய்ந்ததில் 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
நரிமணத்திலிருந்து சென்னைக்கு ஒரு ஆயில் டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது.
அப்போது கீரப்பாளையத்திலிருந்து புவனகிரி பாதையை நோக்கி லாரி திரும்புகையில், அது கட்டுப்பாட்டைஇழந்து சாலையோரமாகக் கவிழ்ந்தது.
அங்கு சாலையோரமாகப் பஸ்சுக்காகப் பொதுமக்கள் காத்துக் கொண்டிருந்தனர். வேகமாக வந்த அந்த டேங்கர்லாரி கவிழ்ந்த பிறகும் நீண்ட தூரம் தரையிலேயே உரசிக் கொண்டு போய் அந்த மக்கள் கூட்டத்தில் பாய்ந்தது.
இச்சம்பவத்தில் பஸ்சுக்குக் கீழே சிக்கி 4 பேர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் சிக்கிய மற்ற 17 பேர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சைபலனளிக்காமல் அங்கு 2 பேர் உயிரிழந்தனர்.
வடகரி ராஜபுரத்தைச் சேர்ந்த கோபு என்பவரின் மனைவி சித்ரா (45), கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த பெருமாள்(40), புவனகிரியைச் சேர்ந்த செல்வராஜ் (40), அன்பழகன் (40) மற்றும் ஆலிச்சிக்குடியைச் சேர்ந்த முருகன் (65)ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இறந்த மற்றொரு ஆண் யார் என்பது தெரியவில்லை.
பெரம்பலூரைச் சேர்ந்த அந்த டேங்கர் லாரியின் டிரைவர் பாபு சிதம்பரம் போலீசாரிடம் சரணடைந்தார். கிளீனர்பற்றிய விவரம் தெரியவில்லை.
புவனகிரி போலீசார் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சி அருகே லாரி கவிழ்ந்து 3 பேர் சாவு:
இதற்கிடையே நேற்று காலை காஞ்சிபுரம் அருகே லாரி கவிழ்ந்து 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த அந்த லாரி, தாமல் அருகே வந்தபோது அன்பழகன் (27),சிவகாமி (18) மற்றும் ஜானகி (19) ஆகிய 3 பேரும் அந்த லாரியின் பின்புறத்தில் ஏறிக் கொண்டனர்.
காஞ்சிபுரத்தை அடுத்த நீர்வளூர் அருகே வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி, அருகிலிருந்தபள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்தது.
இதில் அன்பழகன், சிவகாமி மற்றும் ஜானகி ஆகிய 3 பேருமே லாரியின் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.டிரைவரும் கிளீனரும் தப்பி ஓடிவிட்டனர்.
இவ்விபத்து குறித்து காஞ்சிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications