1986 குண்டு வெடிப்பில் தண்டனை பெற்ற 3 கைதிகளுக்கு ஜாமீன்
சென்னை:
1986ல் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 7 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற 3 திமுக மாணவர் அணிதலைவர்களை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) ஜாமீனில் விடுதலை செய்தது.
கடந்த 1986ம் ஆண்டு இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து திமுகவினர் போராரட்டம் நடத்தினர். அப்போதுஅரசியல் சாசன நகலை திமுக தலைவர் கருணாநிதி எரித்ததன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து தமிழகத்தில் வன்முறை வெடித்தது. சென்னையில் உள்ள ஹிந்தி பிரச்சார சபா, ஏர் இந்தியாஅலுவலகம், பல்லவன் போக்குவரத்துக்கழக டெப்போ மற்றும் சேத்துப்பட்டு ரயில் நிலையம் ஆகிய இடங்களைதிமுகவினர் வெடிகுண்டு வைத்துத் தகர்த்தனர்.
இது சம்பந்தமாக 1998ல் சி.ஐ.டி. போலீசார் தனி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். வெடிகுண்டுவைத்து பொது மக்களின் சொத்துக்களை நாசப்படுத்தியதாக திமுக மாணவர் அணித் தலைவர்களான எராகென்னடி, மதி, தினகரன் மற்றும் நீலநாராயணன் ஆகிய 4 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம் எரா கென்னடி, மதி மற்றும் தினகரன் 3 பேருக்கும் 7 ஆண்டுகள்கடுங்காவல் தண்டனையும் ரூ.20,000 அபராதமும் அளித்து தீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து கென்னடி, மணி, தினகரன் ஆகிய 3 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மலை சுப்ரமணியம் இவர்களை இன்று (வியாழக்கிழமை) ஜாமீனில் விடுதலைசெய்தார்.
ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10,000 தனி நபர் ஜாமீனும், அதே தொகைக்கு இருவர் ஜாமீனும் விதித்து நீதிபதிதீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் மற்றொரு குற்றவாளியான நீலநாராயணன் இன்னும் பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications