ஈரோடு அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து குழந்தை சாவு
ஈரோடு:
ஈரோடு அருகே குழந்தையிடம் குருவி சுடும் துப்பாக்கியைக் காட்டி விளையாட்டுக் காட்டும்போது, திடீரென்றுதுப்பாக்கி வெடித்ததில் குண்டு பாய்ந்து குழந்தை பரிதாபமாக இறந்தது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள காங்கயம்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ரவி. இவரதுஒன்றரை வயது குழந்தை பிரேம். ரவி வீட்டிற்கு பக்கத்து வீட்டில் இருப்பவர் வெங்கடாசலபதி (29).
இவர் பக்கத்து வீட்டு குழந்தை பிரேமை அடிக்கடி தூக்கி வைத்துக் கொண்டு விளையாட்டுக் காட்டி வருவார்.இவரிடம் குருவி சுடும் துப்பாக்கி உள்ளது. அதை வைத்துக் கொண்டும் அடிக்கடி விளையாட்டுக் காட்டி வருவார்.
அதுபோல் சம்பவத்தன்றும் குழந்தையிடம் துப்பாக்கி காட்டி விளையாட்டுக் காட்டியுள்ளார் வெங்கடாசலபதி.அப்போது தவறுதலாக துப்பாக்கி விசையை விரல் தட்டி விட்டதால், துப்பாக்கி வெடித்து குழந்தையின் வயிற்றில்குண்டு பாய்ந்தது.
இதனால் காயமடைந்த குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சைபலனளிக்காமல் குழந்தை இறந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் வெங்கடாசபதியை தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications