மணிப்பூர் தேர்தலில் வன்முறை: 2 போலீசார் பலி
இம்பால்:
மணிப்பூரில் இன்று (வியாழக்கிழமை) நடந்த சட்டசபைத் தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறையில் எல்லைப்பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 2 போலீசார் கொல்லப்பட்டனர்.
வடக்கு இம்பால் மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச் சாவடிக்குள் திடீரென்று புகுந்த சில தீவிரவாதிகள் அங்குபாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசாரை நோக்கி சராமாரியாகச் சுட ஆரம்பித்தனர்.
இதையடுத்து எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அந்தப் போலீசாரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர்.இங்கு நடந்த பயங்கரமான துப்பாக்கிச் சண்டையில் 2 எல்லைப் பாதுகாப்புப் படை போலீசார் கொல்லப்பட்டனர்.வேறு 4 போலீசார் படுகாயமடைந்தனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் வாக்குப் பதிவில் பாதிப்பு ஏற்பட்டாலும், மேலும் ஏராளமான போலீசார் அங்குகுவிக்கப்பட்டதையடுத்து மீண்டும் வாக்குப் பதிவு தொடர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்னும் சில இடங்களில் தீவிரவாதிகள் திடீரென்று புகுந்து துப்பாக்கி முனையில் ஓட்டுச் சீட்டுக்களைப் பறித்துக்கொண்டு ஓடிய சம்பவங்கள் நடந்தன. அங்கெல்லாம் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள்அறிவித்தனர்.
இந்நிலையில் இன்றைய மணிப்பூர் சட்டசபைத் தேர்தலில் 40 முதல் 45 சதவீதம் வரை வாக்குகள்பதிவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
உ..பியும் வன்முறைக்குத் தப்பவில்லை:
இதற்கிடையே உத்தரப் பிரதேசத்தில் (உ.பி.) இன்று நடந்த சட்டசபைத் தேர்தலிலும் ஆங்காங்கே வன்முறைகள்வெடித்தன.
உ.பியில் இன்று நடந்த முதல்கட்டத் தேர்தலின்போது, சுமன் லதா சிங் என்ற பெண் பாஜக வேட்பாளரைஅடையாளம் தெரியாத சிலர் பயங்கரமாகத் தாக்கினர். ஆனால் அவருடைய பாதுகாவலர்கள் பதிலடி தாக்குதல்நடத்தி, அவரைப் பத்திரமாக மீட்டனர்.
மேலும் சில இடங்களில் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுதல் போன்ற சிற்சில சம்பவங்கள் நடைபெற்றாலும்,உ.பியில் பொதுவாக இன்று அமைதியாகவே தேர்தல் நடந்து முடிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இம்மாநிலத்தில் தேர்தலின்போது யாரும் செல்போனைப் பயன்படுத்தக் கூடாது என்று போலீசார்உத்தரவிட்டிருந்தனர். அதன்படி தேர்தல் நேரம் முடியும் வரை செல்போனை "ஆப்" செய்து வைத்திருக்க வேண்டும்என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
உத்தராஞ்சல் சந்தித்த முதல் தேர்தல்:
இதற்கிடையே உத்தராஞ்சல் மாநிலம் துவக்கப்பட்ட பிறகு, இன்றுதான் அங்கு முதல் முறையாக சட்டசபைத் தேர்தல்நடந்துள்ளது.
கடந்த 4 நாட்களாக பனிமழை பொழிந்து வந்த உத்தராஞ்சல் மாநிலத்தின் ஏராளமான பகுதிகளில் இன்றுகாலையிலேயே வெயிலடித்து மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
அவர்களும் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று சுறுசுறுப்புடன் ஓட்டுப் போட்டனர்.
உத்தராஞ்சல் மாநிலத்தில் தேர்தலின்போது எந்தவிதமான வன்முறையும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள்தெரிவித்தனர்.
முதல் முறையாக மின் வாக்குப்பதிவு எந்திரங்கள்:
இந்நிலையில் இந்த 3 மாநிலங்களிலுமே முதல் முறையாக மின் வாக்குப்பதிவு எந்திரங்கள் இந்த சட்டசபைத்தேர்தலில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன.
முதல் முறையாக இந்த மின் வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் ஓட்டுப் போடுவதால் மக்கள் ஆச்சரியத்துடனும்சற்றே "த்ரில்"லுடனும் வந்து ஆர்வத்துடன் ஓட்டுப் போட்டனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications